மாலை நேரத்தில் சுடசுட சாப்பிட இந்த மாதிரி உருளைக்கிழங்கு முட்டை பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான உருளைக்கி

By Prem Kumar · 25/2/2026

சீஸ் பால்ஸ் உலகம் முழுவதும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு வகையாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர்கள் மத்தியில் இதற்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. சீஸ் பால்ஸ்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளன. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் சத்தான உருளைக்கிழங்கு முட்டை பால்ஸ். பள்ளி விடுமுறை என்றாலே வீட்டிலிருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதிற்கு விதவிதமான ஸ்நாக்ஸ்கள் கேட்பார்கள். அதுவும் தற்போதுள்ள குழந்தைகள் பீட்சா, பர்கர் என்று வித்தியாசமாக சாப்பிடுதற்கு தான் விருப்பப்படுகிறார்கள்.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமாக உருளைக்கிழங்கு, முட்டை வைத்து பால்ஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இதை உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் வீட்டில் விஷேசம் என்றால், யோசிக்காமல் இந்த உருளைக்கிழங்கு முட்டை பால்ஸ் செய்து அசத்துங்கள். இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் சீஸின் சுவையுடன் சீஸியாக ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும். உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் இது இடம்பெறும் போது அந்நிகழ்ச்சிகளும் அழகாகும். இதை ஸ்டாட்டராக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த உருளைக்கிழங்கு முட்டை கலவையுடன், உள்ளே ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதை கடிக்கும்போது சீஸின் சுவை மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் சேர்ந்து உங்களுக்கு வித்யாசமான உணர்வைக் கொடுக்கும். உங்கள் விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கும்‌ பொறித்து கொடுக்கலாம். சுடசுட சீஸ் சுவையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இதற்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் எது வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். இப்போது சுவையான உருளைக்கிழங்கு முட்டை பால்ஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : சில்லி சீஸ் டோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full