- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 2
- Cuisine
- Indian
- Course
- evening
சில்லி சீஸ் டோஸ்ட் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி இத பிரேக்ஃபாஸ்ட்க்கு சாப்பிடலாம் ஸ்னாக்ஸா சாப்பிடலாம். டின்னருக்கு கூட சாப்பிடலாம் எல்லாத்துக்குமே சாப்பிடறதுக்கு ஒரு பெர்பெக்ட்டான ரெசிபி இது இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. வீட்ல நிறைய பிரெட் இருந்துச்சுன்னா அதை வைத்து சாண்ட்விச் பிரட் ஆம்லெட் இந்த மாதிரி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா ரொம்ப சிம்பிளா இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சி பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி இது குழந்தைகளுக்கு பிரட் வச்சு செஞ்சு கொடுக்குற எல்லா ரெசிபியும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
அந்த வகையில் இந்த சூப்பரான சில்லி சீஸ் டோஸ்ட் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்ட் ஆனா ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் ஈஸியா செய்யலாம் பேச்சுலர்ஸ் கூட இதை ஈஸியா செஞ்சு சாப்பிடலாம். இதுக்கு நிறைய சீஸ் தேவைப்படும். நிறைய சீஸ் துருவி சேர்த்தால் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். வெறும் நான்கு பொருள் வைத்து இந்த ரெசிபியை சூப்பரா செய்து முடிக்கலாம். ஸ்கூல் விட்டு வர குழந்தைகள் ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னு கேட்டா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செய்து கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா சீஸ் சாண்ட்விச் சுட சுட மாலை வேளையில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் பச்சை மிளகாயையும் நறுக்கி சேர்க்கவும்.
சீஸை துருவி சேர்த்துக் கொள்ளவும். பட்டர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கிளறி எடுக்கவும்.
அதனை பிரட்டில் தடவி தோசை கல்லில் வைத்து மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் தயார்.






