- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening, snacks
என்னதான் ஆரோக்கியமா நிறைய உணவுகள் இருந்தாலும் கூட இப்ப இருக்க கூடிய குழந்தைகளுக்கு பீட்சா பர்கர் பிரெஞ்ச் ப்ரைஸ் சாண்ட்விச் போன்ற உணவுகள் தான் ரொம்ப பிடிக்குது. அத எப்பவுமே உங்களுக்கு வாங்கி தர கூடாது. எப்பவாவது ஒரு தடவை தான் வாங்கி தரணும். அந்த வகையில் கடைகளில் வாங்கி கொடுக்கிறத விட வீட்லையே செஞ்சி கொடுப்பது ரொம்பவே ஆரோக்கியமான ஒன்னு. வீட்டிலேயே நீங்க இந்த மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சுட்டீங்கன்னா போதும் குழந்தைகளை கையில் பிடிக்க முடியாது. ரொம்ப குஷியா மாறிடுவாங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கக்கூடிய சிம்பிளான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான மசாலா சீஸ் சாண்ட்விச் பார்க்க போறோம்.
இத குழந்தைகளுக்கு பிரேக் பாஸ்டா கொடுக்கலாம். மாலை நேரத்தில குழந்தைகள் வீட்டுக்கு வரும்போது அவங்களுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் மாதிரி இந்த சாண்ட்விச் செஞ்சு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இந்த மாதிரி அவங்களுக்கு புடிச்சதிலேயே ஆரோக்கியமா ஏதாவது செஞ்சு கொடுத்தா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இதுல காய்கறிகள் சேர்த்திருக்கிறதால ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. குழந்தைகள் எப்பவுமே காய்கறிகளை அப்படியே கொடுத்தா சாப்பிட மாட்டாங்க. அதுக்கு பதிலா இந்த மாதிரி ஏதாவது செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
அதுலையும் இந்த சாண்ட்விச்ல நம்ம சீஸ் சேர்த்திருக்கிறதால கண்டிப்பா குழந்தைகள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. ஃபாரின்ல குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்ஸ்க்கு கூட இந்த மாதிரி சாண்ட்விச் செஞ்சு கொடுப்பாங்க. நீங்களும் கூட உங்க குழந்தைகள் விரும்பி சாப்டாங்கனா மதிய லஞ்ச் பாக்ஸுக்கு இந்த அருமையான மசாலா சாண்ட்விச் கொடுத்து விடுங்க. கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம டிபன் பாக்ஸ காலி ஆக்கி கொண்டு வருவாங்க. அந்த வகையில் இந்த சூப்பரான ஈஸியான ருசியான மசாலா சீஸ் சாண்ட்விச் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூ போன்ற மிருதுவான பீஸ் மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!
Ingredients
Method
ஒரு கடாயில் பட்டர் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
துருவிய முட்டை கோஸ் துருவிய கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் தூள் கரம் மசாலா தனியா தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிரெட்டை ஒரு பக்கம் பட்டரில் டோஸ்ட் செய்து தயார் செய்து வைத்துள்ளதை பிரட்டின் மேல் தடவி சீஸ் சேர்த்து மற்றொரு பிரட்டையும் மேல் வைத்து இரண்டு பக்கமும் டோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான மசாலா சீஸ் சாண்ட்விச் தயார்.






