பூ போன்ற மிருதுவான பீஸ் மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!

- Advertisement -

ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்று கேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம்.

-விளம்பரம்-

இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் காயும் சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே. மசாலா தயாரித்து இட்லி மாவு மீது ஊற்றி வேக வைத்து கொடுக்கும் பொழுது அதனுடைய ருசியே அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இதை ரொம்பவே சுலபமாக வீட்டிலும் நாம் தயாரிக்கலாம். இட்லி மாவு இருந்தால் கஷ்டப்படாமல் உடனே இப்படி ஒரு ஆரோக்கியமான உணவு கிடைத்தால் நல்லது தானே அப்படி ஒரு இட்லி ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -
Print
No ratings yet

பீஸ் மசாலா இட்லி | Peas Masala Idly Recipe In Tamil

ஆரோக்கியமானஉணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்துகொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்றுகேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில்கொஞ்சம் காயும் சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Peas Masala Idly
Yield: 4
Calories: 16kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 5 சின்ன வெங்காயம்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1/2 தேக்கரண்டி உளுந்து தாளிக்க
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

அரைக்க:

  • தேங்காய் சிறிதளவு
  • 4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள் விருப்பபட்டால் சேர்க்கவும்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிறிது நேரம் கழித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக மாறியதும், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள கலவையை இதில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பட்டாணியை சேர்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
  • பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைத்து ஆற விடவும். ஆறிய பின்னர் இட்லி மாவில் சேர்த்து ஊற்றவும். 10 நிமிடம் கழித்து தக்காளி சட்னி உடன் சூடாக பரிமாறலாம்

Nutrition

Serving: 200g | Calories: 16kcal | Carbohydrates: 89g | Protein: 16g | Fat: 0.2g | Sodium: 538mg | Potassium: 585mg | Fiber: 36g