சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
சில டீக்கடைகளில், ஹோட்டல்களில் உருளைக்கிழங்கு மசாலா போண்டாவை வாங்கி சாப்பிடுவோம். எண்ணெய் குடிக்காமல், பார்ப்பதற்கு அழகாக நம்மை சாப்பிட இழுக்கும் அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நம் கையாலேயே, நம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். ஒரு வாட்டி அந்த உருளைக்கிழங்கு போண்டாவ
சில டீக்கடைகளில், ஹோட்டல்களில் உருளைக்கிழங்கு மசாலா போண்டாவை வாங்கி சாப்பிடுவோம். எண்ணெய் குடிக்காமல், பார்ப்பதற்கு அழகாக நம்மை சாப்பிட இழுக்கும் அந்த உருளைக்கிழங்கு போண்டாவை நம் கையாலேயே, நம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். ஒரு வாட்டி அந்த உருளைக்கிழங்கு போண்டாவை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணிப் பாருங்களேன். இப்போது வேண்டுமானால் பப்ஸ், கட்லட் போன்ற பேக்கரி உணவு வந்திருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் வடைகள் தான் அதுவும் உருளைக்கிழங்கு போண்டா, உளுந்த வடை இவையெல்லாம் சாப்பிடுவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலேயும் காலை உணவில் டிபன் உடன் உருளைகிழங்கு போண்டாவை சாப்பிடும் போது அதன் சுவை அற்புதமாக இருக்கும்.
தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் உருளைக்கிழங்கு போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. உருளைக்கிழங்கு போண்டா பெரும்பாலும் தேங்காய் சட்னியுடனோ அல்லது புதினா சட்னியுடனோ தான் பரிமாறபடுகிறது. என்ன தான் தென்னிந்தியாவில் உதயமாகி இருந்தாலும் இவை வட இந்தியாவிலும் மிகவும் பிரபலம். குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. இதை வீட்டிலேயே இந்த எளிமையான செய்முறை விளக்கத்தை பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்தால் எந்த ஒரு அச்சமுமின்றி குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம். அதை அவர்கள் மிகவும் விரும்பி உண்பார்கள். இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 20 நிமிடங்கள் போதும்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க சிம்பிளான உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி! தயிர் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட அருமையான சைடிஷ்!