- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
உருளைக்கிழங்கில் நாம் எந்த விதமான உணவுகள் செய்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.உருளைக்கிழங்கு பயன்படுத்தி உருளைக்கிழங்கு கூட்டு ,உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு ரோல்,உருளைக்கிழங்கு ரோஸ்ட், உருளைக்கிழங்கு கட்லெட், பூரி கிழங்கு, பால்கறி, பிரெஞ்ச் ப்ரைஸ் என எக்கச்சக்கமான ஸ்னாக்ஸ் ரெசிபிஸும், குழம்பு வகைகளும் கூட்டு வகைகளும் நம்மால் செய்ய முடியும் எது செய்தாலும் மிகவும் ருசியாகவே இருக்கும்.
ஆனால் இது அனைத்தையும் விட உருளைக்கிழங்கை பயன்படுத்தி ஒரு சிம்பிளான வறுவல் செய்து அதனை ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் பிரியாணி கூட தோற்றுவிடும் அந்த அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். ரசம் சாதம் மட்டுமல்லாமல் கலவை சாதனங்களான தக்காளி சாதம் புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் என அனைத்திற்கும் இந்த உருளைக்கிழங்கு வறுவல் நாம் வைத்து சாப்பிடலாம் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
நம் வீட்டில் மிகவும் குறைவான நேரத்தில் ஏதாவது ஒரு சைட் டிஷ் செய்ய வேண்டும் என்றால் உருளைக்கிழங்கு இரண்டு இருந்தாலே போதும் சூப்பராக இந்த வருவலை செய்து முடித்து விடலாம். சுவையும் அருமையாக இருக்கும் அதே நேரத்தில் சட்டு என்று செய்து முடித்து விடலாம். குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு டிபன் பாக்ஸில் இந்த உருளைக்கிழங்கை வைத்துக் கொடுத்து எந்த சாதம் வைத்து கொடுத்தாலும் கண்டிப்பாக அந்த உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடித்து இருப்பார்கள்.
காரணம் உருளைக்கிழங்கின் சுவைதான். அதுமட்டுமில்லாமல் நாம் அந்த உருளைக்கிழங்கு எவ்வளவு சுவையாக செய்து தருகிறோம் என்பதிலும் உள்ளது.நான் உருளைக்கிழங்கை வைத்து பலவிதமான வருவர்கள் செய்திருப்போம் ஆனால் இன்று நாம் மிகவும் சுலபமான முறையில் மிகவும் குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தான் பார்க்கப் போகிறோம். இப்ப வாங்க இந்த சிம்பிள் உருளைக்கிழங்கு வருவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.இப்பொழுது எடுத்து வைத்துள்ள பூண்டை நன்றாக தோலுடன் தட்டி எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் இருவர் தண்ணீர் எதுவும் சேர்க்கப் போவதில்லை அதனால் எண்ணெய் கொஞ்சம் அதிகமாகவே சேர்த்துக்கொள்ளலாம்.
பிறகு நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அந்த எண்ணெயோடு சேர்த்து நன்றாக கிளறவும்.
உருளைக்கிழங்கு அரைவேக்காட்டிற்கு வெந்த பிறகு அதில் மஞ்சள் தோல் மிளகாய் தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
ஒரு மூடி போட்டு மூடி வைத்து விட வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தடவைஅதனை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக உருளைக்கிழங்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் இறக்கினால் சுவையான சிம்பிளான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.






