வீட்டில் பணவரவு அதிகரிக்க வரும் 29ஆம் தேதி இந்த 1 மணி நேரத்தை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!
புராட்டாசி மாதம் பெருமாளுக்குரிய அற்புத மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என்ற மிக முக்கிய நாளாகப்பார்க்கப்படும், அதே சமயம், இந்த மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும் மிக அற்புத விரத நாளாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி பெளர்ணமி அன்
புராட்டாசி மாதம் பெருமாளுக்குரிய அற்புத மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என்ற மிக முக்கிய நாளாகப்பார்க்கப்படும், அதே சமயம், இந்த மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினமும் மிக அற்புத விரத நாளாக பார்க்கப்படுகிறது. புரட்டாசி பெளர்ணமி அன்று அந்த சந்திரனைப் போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் விளங்குவாள். அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமமும் உண்டு.
இந்த அற்புத நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு. அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும். இந்த பௌர்ணமி நாளில் வழிபாடு செய்பவர்கள் நினைத்த காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த புரட்டாசி பௌவுர்ணமி தினத்தை “பாகுளி” என்று அழைப்பார்கள். இந்த புரட்டாசி பௌர்ணமி நாளில் வரும் புதன் ஹோரை நாளில் நாம் சில பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம் நமது வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.
புதன் ஹோரை
புரட்டாசி மாத பௌர்ணமி செப்டம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களில் வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் புதன் ஹோரை நேரத்திற்கு நாம் முக்கியத்துவம் அளித்தாலே போதும் நம் வாழ்வில் நல்ல நிலைமைக்கு சென்று விடலாம். புதன் ஹோரை நேரம் காலை 7 மணி முதல் 8 மணி வரை, மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை உள்ளது. நாம் செய்யும் இந்த பரிகாரத்தை இரவு நேரத்தில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரம் செய்வதற்கு உங்கள் வீட்டில் புதிதாக இருக்கும் பச்சரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் நாம் உபயோகிக்கும் பச்சரிசியை பயன்படுத்தக் கூடாது. பின் உங்கள் வீட்டு பீரோவில் இருக்கும் பணப்பெட்டியை சுத்தமாக துடைத்து, அதன் கீழ் சிகப்பு நிற துணி ஒன்றை விரித்துக் கொள்ளுங்கள். சிகப்பு நிறம் என்பது பணவரவை அதிகமாக ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அதன் பிறகு ஒரு வெள்ளை நிற துணியை பன்னீரில் நனைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
புதன் ஹோரை நேரம் வரும்பொழுது ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை எடுத்து, உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளில் பச்சரிசியை வைத்துக்கொண்டு புதன் பகவானுக்குரிய காயத்திரி மந்திரத்தினை ஒன்பது முறை உச்சரியுங்கள். இப்படி காயத்திரி மந்திரத்தை நாம் உச்சரிக்கும் பொழுது, நமது வீட்டில் ஏற்படும் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு பணவரவு அதிகரிக்கும்.
பின் புதன் பகவானை மனதார வேண்டிக் கொண்டு உங்கள் கைகளில் இருக்கும் பச்சரிசியை வெள்ளை துணியில் வைத்து விடுங்கள். இந்த பச்சரிசியுடன் துளசி இலை மற்றும் பச்சைக் கற்பூரம் இரண்டையும் வைத்து ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சினை நீங்கள் நகை வைக்கும் பெட்டியினுள் வைத்து விடுங்கள். இந்த முடிச்சை அடுத்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று மாற்றினாலே போதும். அதுவரை இந்த முடிச்சு உங்கள் பணப்பெட்டியினுள் அப்படியே இருக்கட்டும்.
இந்த பணப்பெட்டியை உங்கள் பூஜை அறையில் ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் விடிந்ததும் நாம் எப்பொழுதும் வைக்கும் பீரோவில் இந்த பணப்பெட்டியை வைத்து விடுங்கள். இந்த புரட்டாசி பௌர்ணமியில் நாம் இந்த பரிகாரத்தினை மேற்கொள்ளும் பொழுது புதன் பகவானின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே நேர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும். அத்தகைய நேரத்தில் நாம் இந்த பரிகாரத்தினை செய்யும் பொழுது கை மேல் பலன் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் பணம் குறைந்து கொண்டே போகிறதா ? நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்!