வீட்டில் இருக்கும் பணம் குறைந்து கொண்டே போகிறதா ? நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்!

- Advertisement -

பொதுவாக நம் வீட்டில் பண வரவு அதிகரிப்பதற்காக நாம் பல விஷயங்களை செய்வோம் ஆனால் நமது வீட்டில் இருக்கும் பணம் குறைந்து கொண்டே போகிறது என்றால் அதற்கு நாம் வீட்டில் செய்யும் சிறு சிறு தவறுகளாக தான் இருக்கும் அதுவும் அந்த தவறுகள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு பிடிக்காததாக இருக்கும். இதனால் நமது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லாமல் நாம் வீட்டில் இருக்கும் பணம் மற்றும் செல்வ வளங்கள் என அனைத்தும் சிறிது சிறிதாக குறைய தொடங்கும். அதனால் நம் வீட்டில் செல்வ வளங்களை குறைக்கும் வகையில் நாம் செய்யும் தவறுகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

எச்சி பாத்திரம்

பொதுவாக பலரது வீடுகளிலும் இந்த தவறுகள் நடைபெறும் அதாவது டீ காபி ஸ்னாக்ஸ் போன்றவை சாப்பிடுவதற்காக நாம் பயன்படுத்தும் டீ கப் மற்றும் எச்சி பாத்திரங்களை எடுக்காமல் சாப்பிட்ட இடத்திலேயே வைத்து விடுவார்கள். இப்படி இந்த எச்சில் பாத்திரங்கள் நமது வீட்டில் ஆங்காங்கே எடுக்காமல் வைத்திருக்கும் பொழுது மகாலட்சுமி தேவி நம் வீட்டில் தங்காமல் போய்விடுவார் இதனாலும் உங்கள் வீட்டில் பொருளாதார ரீதியாக பாதிப்படைத்து உங்கள் வீட்டின் பணத்தின் அளவு குறைந்து கொண்டே போகும்.

- Advertisement -

தலைக்கு குளித்தல்

சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் ஆண்கள் பெண்கள் எந்தெந்த கிழமைகளில் தவறாமல் தலைக்கு குளித்து பூஜை செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூறுகின்றனர். அப்படி இருக்கையில் ஆண்கள் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளும் தலை குளித்து பூஜை செய்ய வேண்டும். இப்படி செய்யாதவர்களின் வீட்டில் பணம் நிலையாக இருக்காது அதன் மதிப்பு குறைந்து கொண்டே போகும்.

-விளம்பரம்-

துர் தேவதைகள்

நமது வீட்டில் பைப் அல்லது டேப்புகளில் நாம் சரியாக மூடாவிட்டால் தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கும் அல்லது ஏதேனும் பைப் லீக்கேஜ் ஆகி இருந்தாலும் இது போன்று தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கும் இதுபோல வீட்டில் இருக்கக் கூடாது உடனடியாக சரி செய்து விட வேண்டும் அது போல நம் வீட்டில் இருக்கும் சுவற்றில் ஜன்னல்கள் எப்பொழுதும் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது, ஈரப்பதமும் இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில் நம் வீட்டில் துர் தேவதைகள் தங்குமிடமாக மாறிவிடும் நம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியேறிவிடுவாள்.

சமையல் அறை

நாம் சமைப்பதற்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் அரசிமாவால் கோலாம் போட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதன் பிறகு தான் நெருப்பை ஏற்றி சமைக்க சமைக்க வேண்டும் அதேபோல் வீட்டில் உள்ள பெண்கள் காலையில் எழுந்ததும் முகத்தை கூட கழுவாமல் அடுப்பை பற்ற வைத்து வேலைகள் பார்க்க கூடாது. மேலும் நம் வீட்டின் சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் ஒரு சிலர் சமையலறையில் பழைய பாத்திரங்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள் அப்படி இருக்கக்கூடாது இதுபோன்று நீங்கள் செய்தாலும் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வெளியேறி விடுவாள் பின்பு உங்கள் வீட்டின் செல்வ வளம் குறைய தொடங்கி விடும்.

அம்மாவாசை

எல்லாரிடத்திலும் அன்பாக இருப்பது எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசுவது இதெல்லாம் ஒரு சிலரிடம் இருக்கும் குணமே இப்படி அனைவரிடத்திலும் அன்பாகவும் மென்மையாகவும் இருப்பவர்களிடம் செல்வமானது சேர்ந்து கொண்டே இருக்கும். மேலும் அமாவாசையில் நாம் நம் முன்னோர்களான பித்ருக்களுக்கு உகந்த தினமான இந்த நாளில் நம் வீட்டின் வாசலை பெருக்கி கோலம் போடக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி வாசல் தெளித்து கோலம் போட்டாலும் உங்கள் வீட்டில் செல்வ வளம் குறைந்து பல பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here