கேழ்வரகு மாவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான பிரவுனி இப்படி செய்து பாருங்கள்!!

பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிரவுனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த கேழ்

By Prem Kumar · 14/8/2024

பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிரவுனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த கேழ்வரகு பிரவுனிகளும் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

ஆரம்ப காலகட்டங்களில் பண்டிகை காலங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இவை பிற்காலங்களில் இவைகளின் அதீத சுவையினால் பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல் பலர் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டியாக மாறின. இதுவரை நீங்கள் பிரவுனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள்.

என்ன தான் இது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தாலும், கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, அளவாகவே சாப்பிட முடியும். ஆனால் அதையே வீட்டில் உங்களுக்கு தேவையான அளவு செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? அதனால் கேழ்வரகு பிரவுனி எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full