- Prep
- 10 min
- Cook
- 30 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிரவுனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த கேழ்வரகு பிரவுனிகளும் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
ஆரம்ப காலகட்டங்களில் பண்டிகை காலங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இவை பிற்காலங்களில் இவைகளின் அதீத சுவையினால் பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல் பலர் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டியாக மாறின. இதுவரை நீங்கள் பிரவுனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள்.
என்ன தான் இது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தாலும், கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, அளவாகவே சாப்பிட முடியும். ஆனால் அதையே வீட்டில் உங்களுக்கு தேவையான அளவு செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? அதனால் கேழ்வரகு பிரவுனி எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
முதலில் கேழ்வரகு மாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் கோகோ பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும்.
பின் அதனுடன் வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் காபி பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு கேழ்வரகு மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தட்டில் பட்டர் பேப்பர் விரித்து அதன்மேல் நாம் கலந்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றி, அதன்மேல் நறுக்கிய சாக்லேட் துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்.
பின் இதை ஓவனில் 180° செல்சியஸில் 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை துண்டுகள் போட்டு அதன்மேல் சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு பிரவுனி தயார்.






