மீனத்தில் சனி ராகு சேர்க்கையால் 2025 ஆம் ஆண்டில் வெற்றிகளை பெறப்போகும் ராசிகள்!
2025 ஆம் ஆண்டில் நீதி என் கடவுள் ஆன சனி பகவான் அவருடைய ராசியை மாற்றப் போகிறார் ஒவ்வொரு ராசிகளும் இரண்டரை ஆண்டுகள் பயணிக்க கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 2025 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் பயணம்
2025 ஆம் ஆண்டில் நீதி என் கடவுள் ஆன சனி பகவான் அவருடைய ராசியை மாற்றப் போகிறார் ஒவ்வொரு ராசிகளும் இரண்டரை ஆண்டுகள் பயணிக்க கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் 2025 மார்ச் 29ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். நிழல் கிரகமான ராகு தற்போது மீன ராசியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். சனிபகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததும் மீன ராசிகள் சனிபகவானும் ராகுவும் இணைவார்கள் எனவே இந்த இணைப்பால் ஒரு சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் அதிகம். அந்த வகையில் வெற்றியை பெறப்போகும் சில ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி
சனி மற்றும் ராகுவின் இந்த சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் லாபம் அதிகரிக்கும். வெற்றிகள் அதிகரிக்கும் முதலீடுகள் லாபத்தை அதிகரித்துக் கொடுக்கும். பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஆதாயம் ஏற்படும். பெரிய முதலீடுகளால் அதிகமான பயன்பெறுவீர்கள்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது ஆக்கப்பூர்வமான பல நன்மைகளை கொடுக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் அதிகரிக்கும். வியாபாரத்தில் பல வெற்றிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்க வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப சொத்துகளால் ஆதாயமும் உண்டாகும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவான் மற்றும் ராகு பகவானின் சேர்க்கையால் நிறைய நல்ல விளைவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவைகள் கிடந்த பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
மீன ராசி
மீன ராசியினருக்கு சனிபகவான் மற்றும் குரு பகவானின் சேர்க்கை பலவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பலவித பயணங்களில் மேற்கொள்வீர்கள் இதனால் அனுகூலமான நன்மைகளை பெற முடியும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு மற்றும் சனி பகவானின் அருளால் ராஜயோகம் பெற போகும் ராசிக்காரர்கள்!