2025 ஆம் ஆண்டின் முக்கியமான பெயர்ச்சி சனி பெயர்ச்சி அது மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் தற்போது கும்ப ராசியில் இருக்கும் சனிபகவான் 2025 இல் மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார் எனவே 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக இது கருதப்படுகிறது. மேலும் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் வக்ர நிலையில் உள்ளார் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைவார். இதன் காரணமாக குரு பகவானின் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும் நிகழ்வும் ஜோதிடத்தில் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி அனைத்து கிரகங்களின் நிலைக்கும் மாற்றத்தையும் ராசிகளுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் அந்த ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்கு இந்த இரண்டு பயிற்சியின் தாக்கத்தினால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். 2025 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாகவும் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் அதிர்ஷ்டத்தின் உதவியால் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆக்கபூர்வமாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்திலேயே நல்ல பலன்கள் அனைத்தும் கிடைக்கும் பண வரவு அதிகமாக கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபமும் முன்னேற்றமும் கிடைக்கும். உங்களுடைய குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் அமையும். உடல் ஆரோக்கியமாகவும் மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்கு இந்த இரண்டு பெயர்ச்சிகளால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரித்து நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே புரிதல் அதிகரித்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். போட்டு தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் பணம் அதிகரித்து வசதிகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் அதிகமாகவே நடக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு பெயர்ச்சிகளின் காரணமாக பல நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். விழி தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டு இருந்தால் லாபம் அதிகரிக்கும். வருமானமும் அதிகரித்து வீட்டில் உள்ளவர்களால் நன்மைகள் அதிகமாகவே கிடைக்கும்.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குரு பெயர்ச்சியால் புத்தாண்டு லாபகரமானதாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் துணிச்சலும் உறுதியும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமைந்து மகிழ்ச்சி கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!


