நடக்கவிருக்கும் ராகுவின் நட்சத்திர மாற்றம் இனி இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி தான்!
ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழ் இயக்கத்திலேயே பயணிக்கிறார்கள். அதாவது இவர்களது இயக்கம் வக்ர நிலையிலேயே இருக்கின்றது. சனி பகவானை போலவே ராகு, கேது கிரகங்கள் மீதும் பொதுவாக மக்களுக்கு அச்சமிருப்பதை காண்கிறோம். ராகு சுப நிகழ
ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறார். ராகுவும் கேதுவும் எப்போதும் தலைகீழ் இயக்கத்திலேயே பயணிக்கிறார்கள். அதாவது இவர்களது இயக்கம் வக்ர நிலையிலேயே இருக்கின்றது. சனி பகவானை போலவே ராகு, கேது கிரகங்கள் மீதும் பொதுவாக மக்களுக்கு அச்சமிருப்பதை காண்கிறோம். ராகு சுப நிகழ்வுகளுக்கு இடையூறு செய்யும் கிரகமாகவும் பல விஷயங்களுக்கு தடையாக இருக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறார். இதன் காரணமாகத்தான் ராகு காலத்தில் எதையும் செய்ய வேண்டாம் என கூறப்படுகின்றது. ஆனால், சில சமயங்களில் ராகு பல நன்மைகளையும் செய்கிறார். ராகு மற்றும் கேது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றும். அதன்படி இப்போது ராகு நட்சத்திர மாற்றம் மார்ச் 2025 இல் பெயர்ச்சியாகிறது. ராகு நட்சத்திர மாற்றம் பூரம் நட்சத்திரத்தில் நடக்கும். ராகு மார்ச் 16, 2025 அன்று மாலை 6:50 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். ராகுவின் நிலை மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கும். இதில் 3 ராசிக்காரர்களுக்கு ராகுவால் சாதகமான பலன் கிடைக்கும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தரும். எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பணி இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இந்த காலத்தில் மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை முன்னேறும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். தொழிலில் கவனம் செலுத்தினால், வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கான தேடல் முடிவடையும். பண வரவு அதிகமாகும். இதனால் நிதி ஆதாயத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட காலமாக நீங்கள் திட்டமிட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடிக்கும். தொழிலில் சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். ஒன்றன் பின் ஒன்றாக பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கு மிகவும் சாதகமான காலமாக அமையும்.
இதனையும் படியுங்கள் : குரு வக்ர பெயர்ச்சியால் பொற்காலத்தை அடையப்போகும் சில ராசிகள்!