Home ஆன்மிகம் குரு வக்ர பெயர்ச்சியால் பொற்காலத்தை அடையப்போகும் சில ராசிகள்!

குரு வக்ர பெயர்ச்சியால் பொற்காலத்தை அடையப்போகும் சில ராசிகள்!

ஒரு கிரகம் அதனுடைய ராசியை ஒவ்வொரு முறையும் மாற்றும் போதும் 12 ராசிகளுக்கும் அதற்கான தாக்கம் ஏற்படும் ஆனால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கெட்ட சில பலன்களும் கிடைக்கும் அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் வக்ரப் பெயர்ச்சி அடையப் போகிறார். அதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு பொற்காலம் பண யோகம் கிடைக்கப்போகிறது. அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம்

-விளம்பரம்-

மிதுன ராசி

குருவின் வக்கிரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும் யாரிடம் ஆவது கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியவில்லை என்றால் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் அதனால் நல்ல ஆதாயமும் கிட்டும் வேலையில் நன்றாக கவனம் செலுத்தினால் அதில் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும்

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொடுக்கும் சம்பள உயர்வு மூலமாக பணத்தை அதிகமாக சேமிக்கலாம். தொழிலதிபர்களுக்கு வருமானம் பெருகும் லாபமும் அதிகமாக கிடைக்கும் எனவே மொத்தத்தில் இந்த பெயர்ச்சி பல நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியால் நினைத்த காரியம் நடக்கும் திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். எனவே அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்த்து மிகவும் பொறுமையாக ஒரு சில விஷயங்களை கையாண்டு வந்தால் உங்களுக்கு நல்ல காலம் கிட்டும்

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல பலனை கொடுக்கும் இதுவரையில் நிலுவையில் இருந்த வேலைகள் இந்த நேரத்தில் முடிவடையும் செலவுகள் அதிகரித்தாலும் தொழிலதிபர்களுக்கு லாபம் பெருகும் ஆனாலும் செலவுகளை கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்

-விளம்பரம்-

தனுசு ராசி

குரு பகவானின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மரியாதையை அதிகரித்துக் கொடுக்கும்.வேலை பார்க்கின்ற இடத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும் உங்களுடைய நல்ல வேலை பார்க்கும் திறன் உங்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு அதிர்ஷ்ட காலமாக இருக்கும்

மேலும் இந்த ராசிக்காரர்கள் குருபகவான் உடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு “குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சாஷத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ”என்ற ஸ்லோகத்தை வியாழக்கிழமைகளில் கூறலாம்.

இதனையும் படியுங்கள் : சனி நட்சத்திர பெயர்ச்சி இனி ராஜ அதிர்ஷ்டம் மற்றும் பொற்காலம் இந்த ராசிகளுக்கு தான்!!

-விளம்பரம்-