ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம். சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதனுடன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும் சனி. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு முழுவதும், சனி பாகவான் கும்ப ராசியில் தான் பயணிப்பார், ஆனால் நட்சத்திரத்தை மாறிக்கொண்டே இருப்பார். சனி பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். சனி பகவான் வருகிற 3 அக்டோபர் 2024 அன்று சதயம் நட்சத்திரத்தில் பெயரசக்கு அடையப் போகிறார். இது 12 ராசிக்காரர்களின் வாழ்வில் பல பலன்களை தரும். எனவே சனியின் ராசி மாற்றத்தின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பதவி, அதிர்ஷ்ட பொற்காலத்தை தரும் என்று பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலில் பல நன்மைகளைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். பண ஆதாயம் உண்டாகும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். மொத்ததில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த மாற்றம் சிம்ம ராசியினருக்கும் நல்ல பலன்களைத் தரும். தடைப்பட்ட ஒரு வேலை முடிந்து வீடு அல்லது வாகனத்தின் சொந்தக்காரராகும் யோகம் உண்டாகும். புதிய வீடு, நிலம் வாங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய மனக்கசப்புகள் நீங்கும். ஒட்டுமொத்தமாக உங்கள் நல்ல நேரம் தொடங்கும். மேலும் நீங்கள் முன்பை விட நேர்மறையாக உணருவீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சில நல்ல செய்திகளைத் தரும். உத்தியோகத்தில் பண ஆதாயம் கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இக்காலம் சாதகமாக இருக்கும். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் கவனமாக சிந்தித்து செய்ய வேண்டும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சியால் இனி இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்!


