ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் புதன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித உச்சங்களைத் தொடுவார். புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
புதன் நரம்பின் நாயகன். இவர் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். நடக்கவிருக்கும் புதனின் பெயர்ச்சி இந்த மூன்று ராசிக்காரர்களின் மேல் வருவதால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த போகிறார். இதன் காரணமாக, மக்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சமமாக முன்னேறத்தை காண முடியும். வேலையில் ஊதிய உயர்வுடன் பணி உயர்வும் கிடைக்க இருக்கிறது. யார் அந்த மூன்று ராசியினர் இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
கன்னி

புதனின் வருகையால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட போகிறது. தொழில் செய்து வருபவர்களுக்கு அதில் பெரிய முன்னேற்ற ஏற்படும். வேலை செய்வோருக்கு அலுவலகத்தில் அல்லது பணியிடங்களில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளை வெற்றியைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும்.
மிதுனம்

புதனின் பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும். தடைபட்ட பணிகள் தற்போது முடிவடையும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்கு நல்ல நேரம் வரும். உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சிறந்த நேரமாகும். எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.
ரிஷபம்

புதன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்கள் மீது இருப்பதால் வாழ்க்கையில் பெரிய அளவில் பணம் வந்து சேரும். முன்னர் இருந்ததை விட வருமானம் அதிகரிக்கும். உடல் நிலை முன்னெப்போதையும் விட சிறப்பாக இருக்கும். இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : சனி நட்சத்திர பெயர்ச்சியால் கோடீஸ்வரராக போகும் ராசிகள் இவை தான்!!




