ராகு கேது பெயர்ச்சியால் இனி வெற்றி கனியை மட்டும் ருசிக்க போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

- Advertisement -

கிரகங்கள் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும். நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பெயர்ச்சியால் ராசிகளுக்குள் என்னென்ன மாற்றங்கள் நடைபெறப்போகிறது என்பதை பார்ப்போம். அதிலும் முக்கியமாக எந்த ராசிகள் வெற்றி மேல் வெற்றி பெறப் போகின்றன என்பதை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். தந்தை வழிகாரகன் ஆகிய ராகுவும் தாய் வழி காரகன் ஆகிய கேதுவும் கர்ம வினைக்கான பலன்களை கொடுக்கக் கூடியவர்கள். மனதில் ஆசையை தூண்டி அந்த ஆசையினை நாம் கடந்து வந்து அந்த ஆசை வெளியில் சொல்வதற்கு அஞ்சி அந்த ஆசை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் மனக்குழப்பத்திற்கு ஆளாகி பின்பு அதை சரியாக நிறைவேற்றிக் கொள்வது போன்ற விஷயங்களை இந்த ராகுவும் கேதுவும் கொடுக்கின்றார்கள். இவர்கள் நம் கர்ம பயன்களை நமக்கு கொடுக்கக் கூடியவர்கள். நம் முன்னோர்களின் தர்மத்தின் பலன்களையும் அவர்கள் நமக்கு கொடுப்பார்கள்.

-விளம்பரம்-

அப்படிப்பட்ட ராகும் கேதுவும் பெயர்ச்சியாவதில் எந்த ராசிகள் நன்மை அடைய போகின்றன என்பதை பார்க்க இருக்கிறோம். ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக இருப்பதால் மீன ராசி மற்றும் கன்னி ராசிக்கு மட்டுமல்லாமல் ராகுவும் கேதுவும் பார்வை படும் எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதையும் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த ராகு கேது பெயர்ச்சியில் அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தேர்தலிலா வெற்றி கிடைப்பதற்கு அவர்கள் எந்தெந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த மாதிரியான வெற்றிகள் கிடைக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து காண்போம். ராகுவும் கேதுவும் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய கிரகங்களே இருந்தாலும் அவர்கள் துன்பங்களை கொடுத்து பின்னர் பலன்களை கொடுக்கக் கூடியவர்கள். இப்படி நிழல் கிரகங்களாகியதும் கேதுவும் பெயர்ச்சி சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் போன்ற ராசிகளுக்கு வெற்றியை எப்படி கொடுக்கப் போகின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே அஷ்டம ஸ்தான ராகுவும் தன வாக்கு கேது என 18 மாதங்கள் பாம்பு கிரகங்கள் உங்களோடு பயணம் செய்ய உள்ளனர். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். தடைகளைத் தாண்டி வெற்றிபெறப் போகிறீர்கள். சிம்ம ராசியில் பிறந்த அரசியல்வாதிகள் கட்சி பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும். பேசக்கூடிய வார்த்தைகளை நிதானமாக உபயோகிக்க வேண்டும். வாக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் மனோ தைரியத்துடன் சிக்கல்களை தாண்டி வருவீர்கள். வரும் காலத்தில் பல தடைகளைத் தாண்டி தேர்தலில் வெற்றி பெற இருக்கிறீர்கள். காரணம் குருவின் பார்வை ஏப்ரல் மாதம் வரை உங்கள் ராசியில் இருப்பதால் கட்சி தலைமையிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்கள் தலைக்கு மேல் கேது பயணம் செய்ய இருக்கிறார். களத்திர ஸ்தானத்தில் ராகு பயணம் செய்ய போகிறார். எல்லாமே இழுபறியாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு பகவான் நிறைய பணவரவை தர இருக்கிறார். எங்கும் எப்பொழுதும் சந்தோஷம் என்றபடி கன்னியில் ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு வரும் காலங்களில் வெற்றிகள் தேடி வர இருக்கிறது. பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். கட்சி தலைமை அனுசரித்து சென்றால் போதும் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.

துலாம்

கேது உங்களை விட்டு விலகிப் போக இருப்பதால் தலைமையில் இருந்த பாரம் இறங்கியது போல தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். நேர்மறை எண்ணங்களோடு செயல்படுவீர்கள். களத்திர தானத்தில் இருந்து ராகு விலகி விட்டதால் வெற்றி கோட்டையை எட்டிப் பிடிக்க இருக்கிறீர்கள். பொருளாதார ரீதியாக பலம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கடமையை கண்ணாக செய்தால் மக்கள் செல்வாக்குடன் அதிகாரபலமும் தேடி வரும்.

-விளம்பரம்-

விருச்சகம்

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவான் பயணம் செய்ய இருக்கிறார். லாப ஸ்தானத்தில் கேது பகவான் பயணம் செய்ய இருக்கிறார். அதிக அளவு பண வரவு இருக்கும். தொழிலில் லாபங்கள் கிடைக்கும். பேசும் வார்த்தையில் கவனமாகவும் தெளிவாகவும் இருப்பது மிகவும் முக்கியம். பண விவகாரங்களில் கவனம் தேவை. மரியாதைக்கு பங்கம் வர வாய்ப்புண்டு. கட்சித் தலைவரிடம் மனம் விட்டு பேசினால் கருத்து வேறுபாடு பிரச்சினைகளில் இருந்து தவிர்த்து கொள்ளலாம். இந்த தேர்தலில் உங்கள் திறமை பளிச்சிடும். மேடைப் பேச்சுகளில் பேசுவது நல்லது. இந்த தேர்தலில் உங்களுடைய திறமை வெளிப்படும்.