பணவசியத்தை ஏற்படுத்தும் அமாவாசை பரிகாரம்!!

நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக திகழ்வது பணம். பணம் நம்மிடம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அதனால் தான் பலரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டிருக்கி

By ·

நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக திகழ்வது பணம். பணம் நம்மிடம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அதனால் தான் பலரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் பல பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பல பிரச்சினை தீர்க்க வேண்டும் என்றால் பணவசியம் உண்டாக வேண்டும் பணவசியம் ஏற்பட வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியார் நம் வீட்டிற்குள் வரவேண்டும். பணவசியத்தை ஏற்படுத்தவும் மகாலட்சுமி தேவியை வீட்டிற்குள் வர வைக்கவும் அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமி தேவியார்

மகாலட்சுமி தேவியார் எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்கவேமாட்டாள் என்று புராணங்கள் கூறுகிறது. அதனால் தான் அடிக்கடி நாம் மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்து நம் வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது இதன் அடிப்படையில் தான் மகாலட்சுமி தேவியார்க்குரிய நாளான வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் பலவிதமான மகாலட்சுமி வழிபாடுகளை நாம் மேற்கொள்கிறோம். எந்த அளவிற்கு வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக திகழ்கிறதோ அதேபோல் தான் பௌர்ணமி அமாவாசை போன்ற சந்திரா ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களிலும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் அப்படி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமி தேவியாரின் அருளை நம்மால் முழுமையாக பெற முடியும்.

புதன்கிழமை மகாலட்சுமி வழிபாடு

புதன்கிழமையில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் நல்லது பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். புதன் பகவானுக்குரிய தேவதையாக திகழக்கூடியவர்தான் பெருமாள். எனவே அந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு செய்யும் போது பெருமாளையும் சேர்த்து வழிபாடு செய்வதால் மகாலட்சுமி தேவியார் பெருமாள் இருவருடைய அருளையும் சேர்த்து பெறமுடியும்.

அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒரு பொருள் தான் பட்டை. அது சாதாரண பட்டையாக இருந்தாலும் அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம் சுருள் பட்டையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய துண்டு பட்டை இருந்தால் அந்த பட்டையில் பச்சை சிவப்பு இரண்டு நிறங்களில் ஏதாவது ஒரு ஸ்கெட்ச் எடுத்து அதில் ஸ்ரீம் என்ற மகாலட்சுமியின் பீஜ மந்திரத்தை எழுத வேண்டும். இந்த பட்டையை ஒரு சிறிய தட்டிலோ அல்லது அகல் விளக்கிலோ வைத்து வீட்டு நிலை வாசலில் வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து முடித்த பிறகு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பகல் முழுவதும் அந்த பட்டை வீட்டு நிலை வாசலுக்கு வெளியே இருக்கட்டும். அன்று மாலையும் தீபம் ஏற்று வழிபாடு செய்யும் பொழுது வெளியில் இருக்கக்கூடிய அந்த பட்டையை வீட்டிற்குள் எடுத்து வந்து மகாலட்சுமி தேவியாரின் பாதத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டுக்கு வெளியே இருக்கக்கூடிய மகாலட்சுமி தேவியை நாம் வீட்டிற்குள் அழைத்து வருவது போல் இருக்கும். இந்த பட்டைக்கு தினமும் தீப துபாய் ஆராதனை செய்ய வேண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு இந்த பட்டையை எடுத்து யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விடலாம். மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.

இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய மருதாணி இலைகளைக் கொண்டு இந்த ஒன்றை மட்டும் பண்ணுங்க!!

Recipes AMP · Quick view
View full