வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும் வீட்டில் செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் மகாலட்சுமி குடியேறுவார் என்பது முன்னோர்களின் வாக்காகும். வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருந்தால் அங்கு செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அனுகிரகம் இருந்தால் வீட்டில் செல்வம் சேரும், தங்கம் போன்ற ஆபரணங்கள் சேரும், மன நிம்மதி, மன மகிழ்ச்சி, வளர்ச்சி, குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். செல்வ வளத்தை பெருக்கவும் மகாலட்சுமி நம்முடைய வீட்டில் தங்கவும் சில சூட்சுமங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது, அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க வேண்டும் எனில் மற்றும் செல்வ வளம் பெருக வேண்டும் எனில் நாம் வீட்டில் சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும். அது என்ன பரிகாரம் என்பதை நாம் இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமி வீட்டில் தங்க
மகாலட்சுமியின் கடை கண் பார்வை பட்டால் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் வரும் என்பார்கள். அப்படிப்பட்ட மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்யும் பரிகாரத்தை செய்வதால் எவ்வளவு உயர்வான புண்ணியம் கிடைக்கும் என்பதை நினைத்து பாருங்கள். சுத்தமான இடத்தில் லட்சுமி குடியேறுவார். விளக்கு எரியும் வீடு மகாலட்சுமிக்கு பிடித்தமான வீடாக இருக்கும். நம்முடைய வீட்டில் சுத்தமாக இருக்க வேண்டும். காலை மாலை நேரங்களில் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும். அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க வேண்டும் எனில் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
மகாலட்சுமியின் அருள் நிறைந்த மருதாணி
மகாலட்சுமியும் மருதாணியும் வேறு வேறு அல்ல. மகாலட்சுமியின் சொரூபமே இந்த மருதாணி தான். மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி காரிய வெற்றி, செல்வ வளத்தை அதிகமாக நமக்கு கொடுக்கும். குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும் வராது. மகாலட்சுமியின் அருள் பெற்ற மருதாணி இலைகளைக் கொண்டு மகாலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்கிறது வேதம். வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மகாலட்சுமியை நினைத்து மருதாணி இட்டுக்கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
லட்சுமி கடாட்சம் தரும் மருதாணி பரிகாரம்

அழகிற்காக மட்டுமே இந்த செடி வளர்க்கப்படுவதில்லை. மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி காரிய வெற்றி, செல்வ வளத்தை அதிகமாக நமக்கு கொடுக்கும். அதற்காக வெள்ளிக்கிழமை நாளில் உங்கள் வீட்டில் மருதாணி இருந்தால் அதன் இலைகளை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது வெளியில் எங்காவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த மருதாணி இலைகளை நன்கு தண்ணீரில் அலசி விட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த மருதாணியை ஒரு வெற்றிலையில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் வைத்த விட வேண்டும். பின் இந்த மருதாணியின் பக்கத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். அதே வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டில் பூஜைகள் செய்து முடித்த பின் வீட்டில் உள்ள அனைவரும் இந்த மருதாணியை தங்கள் கைகளில் வைத்துக் கொள்ளலாம்.
அடுத்த வெள்ளிக்கிழமை நாளிலும் இதே போல் செய்து வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம். இப்படி சுமங்கலிகளுக்கு மருதாணி கொடுப்பது மகாலட்சுமிக்கே மருதாணி கொடுப்பதற்கு சமமாம். இவ்வாறு நாம் செய்யும் போது மகாலட்சுமி மனம் மகிழ்ந்து, நம்முடைய வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள். வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும். சுமங்கலி பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டால் அவர்களுடைய கைகளில் எப்பொழுதும் மகாலட்சுமி வாசம் செய்வாள். மருதாணி வைக்கப்படும் கைகளில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். காரிய தடை என்பது இருக்கவே இருக்காது என்று சொல்லப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : வீட்டில் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்ய வீட்டில் இருக்க வேண்டிய செடி




