குரு பகவானை வசியப்படுத்த எளிய பரிகாரங்கள்!!
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரு
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. அந்த வகையில் ஜோதிடத்தில், சனி பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த குரு பெயர்ச்சி வரும் மே மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாழ்க்கையில் நன்மைகள் அனைத்தையும் பெற சில பரிகாரங்கள் அனைத்து ராசிகளுக்கும் கைகொடுக்கும். அது என்ன பரிகாரம் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி 2025
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது.
குரு பகவானின் அருளை பெற எளிய பரிகாரங்கள்
வியாழக்கிழமை வழிபாடு
குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. வியாழக்கிழமைகளில் குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் குரு வார விரதம் ஆகும். இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்பதவி கிடைக்கும்.
கொண்டைக்கடலை மாலை
குரு பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் கிழமை ஆகும். வியாழன் கிழமை குருவை வழிபடுபவர்களுக்கு எல்லா வளங்களும் தேடி தானாகவே வந்து சேரும். அதனால் வியாழக்கிழமையில் வெள்ளை நிற கொண்டைக்கடலையில் மாலை கோர்த்து குரு பகவானுக்கு அணிவிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கக்கூடிய வறுமை நிலை மாறும், கஷ்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அது தீர்ந்து அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
தீப வழிபாடு
தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது ஆகும். அதனால் குரு பகவானின் அருளைப் பெற குரு ஓரையில், நவகிரக சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது பலன் தரும். இந்த தீபத்தின் அருகில் முடிந்தால் மஞ்சள் நிறப் பூவை வைப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.
மஞ்சள்
குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள். அதனால் வியாழன் அன்று குங்குமம், மஞ்சள் சந்தனம் அல்லது மஞ்சள் தானம் செய்யவும். அதோடு நெற்றியில் மஞ்சள், சந்தனம் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால் மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகளை நைவேத்தியம் செய்து வழிபடலாம். ஏழை எளியவர்களுக்கு மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி – 2025 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!!