மேஷம்

குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி பலன்களை அள்ளித் தரும். புதிய தொழில் தொடங்க அல்லது முதலீடு செய்ய நல்ல நேரம். வருமானம் அதிகரிக்கும். அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட பதவி, வேலை, அரசுவழியில் அனுகூலம் ஆகியன கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். அவர்களின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். உங்கள் மீது எதிர்கட்சிக்காரர்கள் சுமத்திய வீண் பழியெல்லாம் விலகும்.
ரிஷபம்

குரு பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கலவையான பலனைத் தரும். வேலையில், தொழிலில், நீண்ட கால திட்டமிடலுக்கு சாதகமான நேரம். இதுவரை செலவுகளால் வாடியிருந்த உங்கள் மனம் மலரும். நன்மைகள் தேடிவரும். பெரிய கஷ்டங்கள், நோய்கள் இருப்பதுபோன்ற மனபிரமைகள் விலகும். வாழ்க்கைத் துணை அல்லது காதல் துணையுடன் குழப்பம் ஏற்படலாம். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நீண்ட நாள்களாக இருந்துவந்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
மிதுனம்

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் புதிய வேலை அல்லது படிப்பில் அடியெடுத்து வைக்க நினைத்தால், உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். இதுவரை தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். அவருக்கான மருத்துவச் செலவுகள் குறையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும்.
கடகம்

குரு பெயர்ச்சி கடக ராசிகளுக்கு மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அனுபவிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னை விலகி கருத்தொற்றுமை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். பணவரவில் இருந்த தடை நீங்கும். பொன் பொருள் சேரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் குடும்பத்தில் ஏற்பாடாகும்.ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.
சிம்மம்

குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள், உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை கண்டும் காணாமல் போனவர்கள் தேடிவந்து பேசுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதற்குரிய மரியாதையும் கிடைக்கும். பூர்விகச் சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். ஏமாற்றங்கள், தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
கன்னி

குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் விலகும். வெற்றி வாய்ப்புக்கள் தேடி வரும். என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். இனி கோபப்படாமல் பேசுவீர்கள்.
துலாம்

குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு, குறிப்பாக கல்வி, பயண விஷயங்களில் மிகுந்த பலன் தரும். மேலும் புதிய திட்டம் அல்லது யோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்த நேரம் சாதகமானது. உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். இருந்த தடைகள்நீங்கும். பேச்சிலும் கனிவும் முதிர்ச்சியும் தேடிவரும்.
விருச்சிகம்

குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் முன்னேற்றம் தரும். சேமிப்பை அதிகரித்து நிதி திட்டங்களில் வெற்றியை அடையலாம். பண வரவும் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பழைய வாகனங்களை மாற்றிப் புதுவாகனம் வாங்குவீர்கள். வங்கிக்கடனுதவியுடன் சொந்த வீடு வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அனைவரையும் அரவனைத்துப்போங்கள். குழந்தைகளிடம் கடுகடுப்பு காட்டவேண்டாம்.
தனுசு

குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மேலும் முக்கிய முடிவுகளை சரியான திசையில் எடுப்பீர்கள். இனி தடைகள் விலகும். எதிர்த்தவர்களும் அடங்கிப்போவார்கள். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். பூர்விக சொத்துப் பிரச்னை தீரும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். மகன் அல்லது மகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்புண்டு. பிள்ளை வரம் வேண்டியவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்

குரு பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் மனவளர்ச்சிக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் கூடும். அனைத்தையும் செய்துமுடிக்கும் ஆற்றல் பிறக்கும். வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.
கும்பம்

குரு பெயர்ச்சி கும்பம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் புதிய முயற்சி அல்லது திட்டம் ஏதேனும் நினைத்தால் இந்த நேரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். சிலருக்குப் புதிய வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பயணங்களும் அதனால் ஆதாயமும் அமையும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடிவரும். காது சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். நகைகள் வாங்கும் யோகம் வாய்க்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். பலசிந்தனைகளுடன் தூக்கமில்லாமல் இருந்தவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வரும்.
மீனம்

குரு பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை கொடுக்கும் காலமாக இருக்கும். உங்கள் தொழிலிலும் நல்ல பலன்களைப் பெறலாம். எதிரிகளின் தொல்லைகள் விலகும். பலவகையிலும் பணம் வரும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். தந்தை வழியில் பணவரவு உண்டு. தந்தையின் ஆரோக்கியமும் மேம்படும். உங்கள் படைப்பாற்றலை மீட்டெடுப்பீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். அம்மாவுடனான மனஸ்தாபங்கள் நீங்கும்.
இதனையும் படியுங்கள் : 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவிருக்கும் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை இனி இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!!


