மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட ருசியான பீர்க்கங்காய் பஜ்ஜி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! 2 பஜ்ஜி அதிகமாவே சாப்பிடுவாங்க!
பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். நம் வீட்டில் ஒதுக்கப
பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும். இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். நம் வீட்டில் ஒதுக்கப்படும் காயாக பீர்க்கங்காய் உள்ளது. பீர்க்கங்காயில் பல வகையான சத்துக்களை கொண்டது. அதிலும் இது பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது உடல் எடை குறைப்பு, ரத்த சர்க்கரை நோய், இரத்த சோகை போன்ற நோய்களுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த காயை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு பீர்க்கங்காய் பஜ்ஜி செய்யலாம். பீர்க்கங்காய் பஜ்ஜி பொதுவாக தென்னிந்தியாவில் விரும்பி செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகும்.
இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி என்பது அதிகமான சத்துக்கள் அடங்கிய பீர்க்கங்காயை கலர் புல்லான கடலை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு மொறு மொறுவென பொரித்தெடுத்து பரிமாறும் ரெசிபி ஆகும். இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி உங்கள் மாலை நேர தேநீர் வேளையை கண்டிப்பாக சுவை மிகுந்ததாக மாற்றக் கூடியது. அதுவும் குறிப்பாக மழைக்காலத்தில் அந்த சில்லென்ற பருவ காலத்தில் ஒரு கப் தேநீருடன் இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி போட்டு சாப்பிட்டால் போதும் ஒரு இனிமையான விருந்து கிடைக்கும். இதன் மேல் பூசப்பட்டிருக்கும் கடலை மாவின் மொறு மொறுப்பான தன்மையும் உள்ளே பீர்க்கங்காயின் மென்மையான தன்மையும் காரசாரமான சுவையும் உங்கள் நாக்கில் எச்சு ஊற வைத்து விடும்.
காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, காய்கறிகளை சாப்பிட வைக்க ஒரு அருமையான வழி தான் பஜ்ஜியாக செய்து கொடுப்பது. அதிலும் குழந்தைகள் பீர்க்கங்காய் சாப்பிடவே மாட்டார்கள். எனவே அந்த பீர்க்கங்காயை பஜ்ஜியாக செய்து கொடுத்தால், அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் மாலை வேளையில் டீ/காபி குடிக்க கொடுக்கும் வேளையில் செய்து கொடுத்தால், அவர்களின் பசி நீங்கும். தீடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் கூட இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி செய்து அசத்திடலாம். ஏனெனில் இது செய்வதற்கு மிகவும் விரைவான எளிதான ரெசிபி ஆகும். மேலும் இது குழந்தைகளுக்கும் ரெம்ப பிடித்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். இந்த பீர்க்கங்காய் பஜ்ஜி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!