ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!

- Advertisement -

கருவாட்டு குழம்பு அப்படின்னாலே அந்த குழம்பு வச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வாசனை வீட்டையே தூக்கும் வீட்டை மட்டும் இல்லாம ஆளையே கூட தூக்கம் அந்த அளவுக்கு ஒரு மணமான குழம்பு தான் கருவாட்டு குழம்பு. மீன் குழம்பு பிடிக்காத உங்களுக்கு கூட சில நேரங்களில் கருவாட்டு குழம்பு பிடிக்கும். மீன் எடுக்க சில நேரம் காசு இல்லாதவங்க கூட இந்த கருவாட்டு குழம்பு மீன் குழம்பு நெனச்சு சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

வீட்ல பழைய சோறு இருந்தா இந்த கருவாட்டை உப்பு எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டா பழசு ஒரு கூட பிரியாணி மாதிரி தெரியும் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இந்த கருவாடு வச்சு குழம்பு கருவாடு பொரியல் கருவாடு தொக்கு கூட செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா பீர்க்கங்காயும் கருவாடும் வச்சு தொக்கு தான் செய்யப் போறோம். இந்த பீர்க்கங்காய் கருவாட்டு தொக்க நம்ம வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சூப்பரா இருக்கும்.

- Advertisement -

அதே நேரத்தில் பழைய சோறு இல்லன்னா கலவை சாதம்னு எதுக்கு வெச்சு சாப்பிட்டாலும் காம்பினேஷன் சூப்பரா இருக்கும். நம்ம பீர்க்கங்காய் வைத்து தனியா நிறைய டிஷ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். என் பீர்க்கங்காய் தோலில் கூட நம்ம சட்னி செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா பீர்க்கங்காயையும் கருவாட்டையும் வச்சு செய்யப் போற இந்த தொக்கு நீங்க வீட்ல ஒரு தடவை செஞ்சு பார்த்தா போதும் அதுக்கு அப்புறம் நீங்க அடிமையாகிடுவீங்க. அந்த அளவுக்கு இதோட சுவை அருமையாக இருக்கும். இப்ப வாங்க இந்த பீர்க்கங்காய் கருவாடு தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
2 from 1 vote

பீர்க்கங்காய் கருவாடு தொக்கு | Ridge Gourd Dry Fish Curry

வீட்ல பழையசோறு இருந்தா இந்த கருவாட்டை உப்பு எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டா பழசு ஒரு கூடபிரியாணி மாதிரி தெரியும் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இந்த கருவாடுவச்சு குழம்பு கருவாடு பொரியல் கருவாடு தொக்கு கூட செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால்இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா பீர்க்கங்காயும் கருவாடும் வச்சு தொக்கு தான் செய்யப்போறோம். இந்த பீர்க்கங்காய் கருவாட்டு தொக்க நம்ம வெறும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சூப்பரா இருக்கும். இதோட சுவை அருமையாக இருக்கும். இப்ப வாங்க இந்த பீர்க்கங்காய்கருவாடு தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ridge Gourd Dry Fish Thokku
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பீர்க்கங்காய்
  • 150 கிராம் குச்சி கருவாடு
  • 5 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 3 பூண்டு பற்கள்
  • கறிவேப்பிலை சிறிய அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருவாட்டை சுடு தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பீர்க்கங்காயையும் தோல் சீவி உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெங்காயம் தக்காளி இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கடலை பருப்பு, பச்சை மிளகாய் பூண்டுபற்கள்,கருவேப்பிலை, என அனைத்தையும் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள கருவாடுகளை போட்டு நன்றாக பொரித்து எடுத்து க் கொள்ள வேண்டும்.
  • பொரித்த கருவாடுகளில் வெங்காயம் தக்காளி வதங்கியவுடன்அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  • பின்பு வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காயையும்சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் அனைத்தையும்சேர்த்த நன்றாக கலந்து விட வேண்டும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் நன்றாக வேகவைத்த இறக்கினால் மணக்க மணக்க பீர்க்கங்காய்கருவாடு தொக்கு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 245g | Cholesterol: 1mg | Sodium: 233mg | Potassium: 3.2mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg