வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? ரோஜா செடியை வீட்டுன் இந்த இடத்தில் வையுங்கள்!!

- Advertisement -

ரோஜா பூக்களை பிடிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது. பொதுவாக பெண்கள் அவர்கள் வீட்டில் ரோஜா பூக்கள் அல்லது மணமான பூக்களை வீட்டின் அழகிற்காக வாங்கி வளர்ப்பார்கள். அச்செடியில் வளரும் பூக்களை அழகுக்காக வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அதை அவர்களின் பூஜைக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.

-விளம்பரம்-

வீட்டில் வளர்க்க ஏற்ற பலவகையான பூச்செடிகள் உள்ளன. ஆனால் அவற்றில் ரோஜா பூ செடியை பலர் வீட்டில் வளர்க்க ஆசைப்படுவார்கள். ரோஜா காதலின் சின்னமாக கருதப்படுகிறது. ஆனால் ரோஜாப் பூவானது ஒருவரது அதிர்ஷ்டத்தையே மாற்றக்கூடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் அந்த ரோஜாப்பூ செடியை வீட்டில் வளர்த்து வருவது நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிப்பதோடு, செல்வமும் பெருகும். இப்போது வீட்டில் செல்வம் பெருகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகளைப் போக்கவும் ரோஜா செடிகளை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்தும், ரோஜாப் பூ பரிகாரங்கள் குறித்தும் காண்போம்.

- Advertisement -

வீட்டு பிரச்சனைகள் நீங்க

உங்கள் வீட்டில் சண்டை சச்சரவு மட்டுமே இருந்தால், ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் சிவப்பு ரோஜா மலர்களை மகாலட்சுமி தாயாருக்கு அணிவித்து விளக்கேற்றி பூஜை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும்.

காதல் வாழ்க்கை சிறக்க

தம்பதிகள் இடையே பிரச்சனைகள் இருப்பின் ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் நிரப்பி அதில் ரோஜா இதழ்களை போட்டு படுக்கும் அறையில் வைத்து விட வேண்டும். தினமும் இந்த தண்ணீரையும் ரோஜா இதழ்களையும் மாற்றி வர தம்பதிகளிடையே அன்பும், அறைவனைப்பும் பெருகுவதை நாம் காணலாம்.

பணப் பிரச்சனைகள் நீங்க

பணப் பிரச்சனைகளுக்கு ரோஜாப்பூ நல்ல தீர்வைத் தரும். வாஸ்து படி, தினமும் மாலை வேளையில் ரோஜா பூக்களை லட்சுமி தேவிக்கு படைத்து வந்தால், பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 5 ரோஜா இதழ்களை, வெற்றிலையுடன் சேர்த்து துர்கை அம்மனுக்கு படைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பண பிரச்சனை உடனே சரியாகும்.

-விளம்பரம்-

சிக்கிய பணத்தை பெற

நீங்கள் மற்றவருக்கு கடனாக கொடுத்த பணம் இன்னும் உங்கள் கைக்கு வரவில்லையா? அப்படியானால் சிறிது கற்பூரம் மற்றும் கிராம்பை எடுத்து, சிவப்பு ரோஜாவுடன் வைத்து, துர்கை அம்மனுக்கு வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சிக்கிய பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.

வியாபாரம் பெருகி செல்வம் செழிக்க

வீடு செல்வ செழிப்போடும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவப்பு ரோஜாப்பூவை லட்சுமி தேவிக்கு படைத்து வார வேண்டும். இப்படி 11 வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்தால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாரா?

வீட்டில் இருப்போரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், வெற்றிலையுடன், ரோஜா இதழ்களை எடுத்து, 11 முறை சுற்றி, வெளியே தூக்கி எறிய வேண்டும். இப்படி சுற்றிப் போடுவதன் மூலம், ஆரோக்கியம் மேம்படத் தொடங்கும்.

-விளம்பரம்-

வீட்டில் ரோஜா செடிகளை வைக்க சிறந்த திசை எது?

வாஸ்து படி, வீட்டில் ரோஜா செடிகளை வளர்க்க விரும்பினால், அந்த செடியை தென்மேற்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். அதுவும் சிவப்பு நிற ரோஜா செடியை வளர்க்க சிறந்த திசை தென்மேற்கு தான். இந்த திசையில் சிவப்பு ரோஜா செடியை வைத்து வளர்த்து வந்தால், சமூகத்தில் அந்தஸ்து அதிகரிப்பதோடு, வீட்டில் செல்வமும் பெருகும்.