Advertisement
சைவம்

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

Advertisement

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை பொறுத்து தான் அவற்றின் சுவை மாறுபடுகிறது. அதிலும் காலை மற்றும் மாலை வேளையில் எளிமையான உணவுகளை மட்டும் தான் செய்து சாப்பிடுகிறோம். அவ்வாறு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இவ்வாறான உணவுகளை தான் அடிக்கடி செய்கின்றோம்.

ஆனால் ஒருமுறை இப்படி வித்தியாசமாக ஜவ்வரிசியில் ஒரு கிச்சடி செய்து பாருங்கள். இதனை கேட்கும்போதே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் தான் இருக்கும் இதன் சுவையும் இருக்கும். இதனை செய்வதும் மிகவும் சுலபமான விஷயம் தான். வாருங்கள் இந்த சுவையான ஜவ்வரிசி கிச்சடியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.ஜவ்வரிசி உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் என்று புதிதாக யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் ஜவ்வரிசி  சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் ஆரோக்கியமின்மையை சரி செய்து விடும் தன்மை இந்த ஜவ்வரிசி உண்டு.

Advertisement

ஜவ்வரிசியானது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியாதல் போன்ற செரிமானம் தொடர்பான எந்த பிரச்சனையையும் இது சரி செய்கிறது. ஏனெனில் ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.இதை நாம் தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் கட்டாயமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. அந்த வகையில் இந்த ஜவ்வரிசியை பொடித்து ஒரு ஆரோக்கியமான முறையில் கிச்சடி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஜவ்வரிசி கிச்சடி | Sago Kichadi Recipe In Tamil

Print Recipe
இந்த சுவையான ஜவ்வரிசி கிச்சடியை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம்
Advertisement
தெளிவாக தெரிந்து கொள்வோம்.ஜவ்வரிசி உடலுக்குஎவ்வளவு நன்மைகள் தரும் என்று புதிதாக யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் ஜவ்வரிசி  சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் ஆரோக்கியமின்மையை சரி செய்து விடும் தன்மை இந்த ஜவ்வரிசி உண்டு. ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.இதை நாம் தினமும் உணவில் ஏதாவது ஒருவகையில் கட்டாயமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. அந்த வகையில் இந்த
Advertisement
ஜவ்வரிசியை பொடித்துஒரு ஆரோக்கியமான முறையில் கிச்சடி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
Course Breakfast
Cuisine mumbai
Keyword Sago Kichadi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 332

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 100 கிராம் ஜவ்வரிசி
  • 3 உருளைக் கிழங்கு
  • 1/2 கப் வறுத்த வேர்கடலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்புன் கரம் மசாலா
  • 1/2 ஸ்புன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்புன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • ஜவ்வரிசி மூழ்குமளவு நீர் விட்டு 8 மணி நேரம் ஊறவிடவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய சதுரங்களாக நறுக்கவும். வேர்க்கடலையை நன்றாக வறுத்து கரகரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்ததை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். ஜவ்வரிசி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.
  • மிதமான வெப்பத்தில் அவ்வப்பொழுது கிளறியபடி 15 நிமிடங்கள் வேக விடவும், ஜவ்வரிசி மிகவும் மென்மையாக, கண்ணாடி போன்று தெரிந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனுடன் குருமா, மசாலா குழம்பு வகைகள் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 332kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Sodium: 3mg | Potassium: 5mg | Fiber: 7g
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

19 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

1 மணி நேரம் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

5 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

5 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

7 மணி நேரங்கள் ago