அம்பிகையின் அருளை பெற பெண்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய நவராத்திரி பண்டிகை!!
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. இந்த ஒன்பது நாட்களையும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். இந்த நவராத்திரியில் தான் தேவி மகிஷசுரனை வென்று வெற்றி மாலை சூடுகிறார். இந்த பண்டிகையின் சிறப்பு அம்சம் கொலு வைப்பது. வீடுகளிலும் கோவில்களிலும் அழகிய பொம
நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. இந்த ஒன்பது நாட்களையும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். இந்த நவராத்திரியில் தான் தேவி மகிஷசுரனை வென்று வெற்றி மாலை சூடுகிறார். இந்த பண்டிகையின் சிறப்பு அம்சம் கொலு வைப்பது. வீடுகளிலும் கோவில்களிலும் அழகிய பொம்மைகளை படிகளில் அடுக்கி கொலு வைத்து பூஜை செய்வார்கள். வட இந்தியாவில் இந்த நவராத்திரி பண்டிகை தசரா என்ற பெயரில் தாண்டியா ஆட்டங்களுடன் அமர்களமாக கொண்டாடப்படும். இந்த நவராத்திரி அம்பிகையை சிறு குழந்தையாக பாவித்து ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அம்பிகையை அழைத்து பாடல்கள் பாடி தாயின் மனதை மகிழ்வித்து அவரின் ஆசியை பெறுவார்கள். முதல் மூன்று நாட்களில் தாயை துர்காதேவியாகவும் அடுத்த மூன்று நாட்களில் தாயை லட்சுமி தேவியாகவும் கடைசி மூன்று நாட்களில் தாயை சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறோம். அப்படி என்ன சிறப்பு இருக்கிறது இந்த நவராத்திரி வழிபாட்டில்? ஏன் குறிப்பாக பெண்கள் நவராத்திரி விழாவை வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
நவராத்திரி 2025
நவராத்திரி என்பது தாய் மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுகிறார். பத்தாவது நாள் தாயின் வெற்றியை தேவர்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி அம்பிகை மகிஷாசுரடன் எட்டு நாளில் போர் புரிந்து ஒன்பதாவது நாள் வெற்றி பெறுவதை நவராத்திரி என்று அழைக்கின்றார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமியும் நிறைவடைகிறது. இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் காலை மாலை பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக காலை 10.30-12.00 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9:00 மணிக்குள் வணங்க வேண்டும். பூஜை செய்யும் நேரத்தில் ராகு காலம், எமகண்டம் இல்லாமல் பார்த்துக் கொண்டு பூஜையை துவங்குவது நல்லது.
நவராத்திரி கொண்டாடும் முறை
நவராத்திரியை கொண்டாடுவதற்கு வழிமுறைகள் பல இருக்கின்றன. அதில் முதலாவது கொலு வைக்கும் பழக்கம். ஆனால் ஒருமுறை நாம் கொலு வைத்து விட்டோம் என்றால் இறுதிவரை கொலு வைத்து கொண்டாட வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் நம்முடைய வீட்டில் கலசத்தில் உள்ள தாய்க்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும். காலை மாலை இரண்டு வேளைகளிலும் தூப தீப ஆராதனை காட்டி அர்ச்சனை செய்து நெய்வேத்தியம் படைத்து வீட்டிற்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு நைவேத்தியம், மங்கல பொருட்கள் கொடுக்க வேண்டும். நவராத்திரி தினத்தில் நம்முடைய இல்லத்திற்கு வருபவர் யாராக இருந்தாலும் அவரை அம்பிகையாக பாவித்து அவருக்கு ஏதாவது ஒரு பரிசு பொருளை கொடுத்து மகிழ்விக்க வேண்டும். இது எதுவும் முடியாது என்பவர்கள் வீட்டில் உள்ள அம்பிகையின் படத்திற்கு பூஜை செய்து தெரிந்த ஒரு பாடலை பாராயணம் செய்து வழிபட்டு தாயின் அருளைப் பெறலாம்.
வீட்டில் எப்படி கொலு அமைக்க வேண்டும்?
நவராத்திரிக்கு கொலு வைப்பதே ஒரு பண்டிகை போல கோலாகலமாக இருக்கும். அந்த வகையில் கொலு வைப்பவர்கள் கொலு வைப்பதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்து, ஒற்றைப் படையில் படிகள் வைக்க வேண்டும். கொலு வைக்கும் முன்பு, படிகள் மீது பட்டு புடவை அல்லது புதிய புடைவை அல்லது துணி சாற்றி, அதன் பிறகுதான் பொம்மைகளை அடுக்க வேண்டும். கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளாக இருக்க வேண்டும். மேலே இருக்கும் படியில், உயர்ந்த படியில் கடவுளின் பொம்மைகளை வைக்க வேண்டும். அதன் பிறகு சித்தர்கள், பிறகு மனிதர்கள், அதன் பிறகு விலங்குகள், தாவரங்கள் என கதை சொல்லும் விதமாக பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும். கொலு வைப்பவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி கொலுவை அமைக்க வேண்டும்.
நவராத்திரி வழிபாட்டின் சிறப்புகள்
நவராத்திரி வழிபாடு என்பது அளவில்லாத நலன்களை அள்ளித் தரக் கூடிய ஒன்பது நாள் பண்டிகையாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையின் ஒவ்வொரு வடிவங்களை வழிபட்டு, அருள் பெறக் கூடிய காலமாகும். இந்த நாளில் தானம் தர்மம் செய்பவர்களுக்கு அம்பிகையின் அருளும், அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரும். இந்த நாட்களில் அம்பிகையை பூஜித்தால் அம்மை நோய் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும். மேலும் எதிர்மறையான விளைவுகள் எதுவும் அண்டாது. கடன் தொல்லைகள் நீங்கும். ஆயுளும் செல்வமும் விருத்தி அடையும், திருமணம் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் ஆகியவை நிறைவேறும். இந்த நவராத்திரி பண்டிகை முழுக்க முழுக்க பெண்களுக்கான உரிய பண்டிகை என்பதால் தவறாமல் இப்பண்டிகையை பெண்கள் அனைவரும் வழிபட வேண்டும்.
இதனையும் படியுங்கள் : நவராத்திரியில் வீட்டில் இப்படி கொலு வைத்தால் அம்பிகை வீட்டில் நிரத்தரமாம குடியேறுவாள்!