குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை எக் சாண்ட்விச் ரெசிபி செஞ்சு பாருங்க!!
பொதுவாக இப்போ இருக்கிற குழந்தைகளுக்கும் சரி பெரியவங்களுக்கும் சரி ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாண்ட்விச், பீட்சா,பர்கர் பிரைட் ரைஸ் இந்த மாதிரி உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவாங்க. அத கடையில வாங்கி கொடுக்குறத விட வீட்லையே செஞ்சு கொடுக்கிறது தான் ரொம்ப நல்லது. அந்த
பொதுவாக இப்போ இருக்கிற குழந்தைகளுக்கும் சரி பெரியவங்களுக்கும் சரி ஃபாஸ்ட் ஃபுட் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாண்ட்விச், பீட்சா,பர்கர் பிரைட் ரைஸ் இந்த மாதிரி உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவாங்க. அத கடையில வாங்கி கொடுக்குறத விட வீட்லையே செஞ்சு கொடுக்கிறது தான் ரொம்ப நல்லது. அந்த வகையில இன்னைக்கு நம்ம வித்தியாசமான எக் சாண்ட்விச் ரெசிபி செய்ய போறோம் ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து இந்த ரெசிபி செய்யலாம்.
இதை காலைல பிரேக் பாஸ்ட்டுக்கும் சாப்பிடலாம் ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். எப்பவுமே ஒரே மாதிரியா பிரேக் பாஸ்ட்க்கு இட்லி, தோசை, பொங்கல் பூரி அப்படின்னு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா எக் சாண்ட்விச் சாப்பிடலாம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். உங்ககிட்ட சில்லி ஃபிளேக்ஸ் இருந்தா சேர்த்துக்கலாம் சில்லி ஃப்ளேக்ஸ் இல்ல அப்படின்னா அத சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் காரத்துக்கு சேர்த்து கூட செய்யலாம்.
ஒரு சாண்ட்விச் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். இதுல நம்ம முட்டையை வேகவைத்து சேர்க்கிறதால உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. மைதா மாவு பிரெட்ல செய்து சாப்பிடவில்லை என்றால் கோதுமை மாவு பிரட்டில் இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம் ஆரோக்கியமானது. சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிற குழந்தைகள் கூட இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான எக் சாண்ட்விச் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மசாலா ஸ்டஃப்டு முட்டை பணியாரம் இது போல் செய்து பாருங்கள்!!