- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish, snacks
இப்ப எல்லாரும் முட்டை வச்சு முட்டை பணியாரம் செய்ய ஆரம்பிச்சுட்டோம். அந்த முட்டை பணியாரத்திலேயே கொஞ்சம் வித்தியாசமா, மசாலா ஸ்டஃப் பண்ணி செய்ற இந்த மசாலா முட்டை பணியாரம் கண்டிப்பா எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிவிடும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. முட்டை பிரியர்கள் இருந்தாங்கன்னா அவங்களுக்கு இதை செஞ்சு கொடுங்க அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. முட்டை பிரியர்கள் எப்பவுமே ஒரே மாதிரியா சாப்பிட்டு போர் அடிச்சு போயிருப்பாங்க அதனால அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க.
சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் செஞ்சு சாப்பிடணும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா அடிக்கடி செய்வீங்க. இதுக்கு நம்ம கரம் மசாலா சேர்த்து செய்றதால வாசனை அவ்வளவு அருமையாக இருக்கும். முட்டையை சாப்பிடும்போது மசாலா பிளேவரோட சாப்பிடுவதற்கே அவ்ளோ ருசியாக இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் சாப்பிட்டு பாருங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். பருப்பு சாதம் வச்சு அது கூட இந்த ரெசிபியை சைட் டிஷ் ஆக சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்.
பருப்பு சாதத்துக்கு மட்டுமில்லாமல் வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, குஸ்கா கலவை சாதங்களான தயிர்சாதம் தக்காளி சாதம் தேங்காய் சாதம் எல்லாத்துக்குமே இது சூப்பரான சைடு டிஷ் ஆக இருக்கும். குழந்தைகளுக்கு இதை பிரேக்ஃபாஸ்ட்டாவே கொடுக்கலாம். லஞ்ச் பாக்ஸ்க்கு ஏதாவது சிம்பிளான சாதம் செஞ்சு கொடுக்கும்போது இந்த மாதிரி ஒரு சூப்பரான முட்டை பணியாரம் செஞ்சு கொடுத்தீங்கன்னா சாதத்தையும் சேர்த்து காலி பண்ணிட்டு வருவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : திருவண்ணாமலை இனிப்பு பணியாரம்
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி தனியாக வைத்து விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் மசாலா உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் மசாலா தயார்.
ஒரு பணியாரக் கல்லில் பாதி அளவிற்கு முட்டையை ஊற்றி அதன் மேல் மசாலா வைத்து அதன் மேல் மறுபடியும் முட்டையை ஊற்றி எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான மசாலா ஸ்டஃப்டு முட்டை பணியாரம் தயார்.






