சொந்த வீடு வாங்க எளிய பரிகாரங்கள்!!

நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோ தான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்த

By ·

நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோ தான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது. சிலருக்கு வீட்டுக்கு மேல் வீடு சேர்ந்து வருமானம் கொழிக்கும் வீட்டு உரிமையாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும். சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் பல்வேறு துன்பத்தில் உழன்று கிடப்பதும் நடக்கும். புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும், சொந்த வீடு இருப்பவர்கள் இன்னொரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரம் செய்தால் கை மேல் பலன் கிடைத்துள்ளதாக வீடு கட்டியவர்கள் அனுபவப்பூர்வமாக கூறியுள்ளனர். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சொந்த வீடு வாங்க பரிகாரம்

சொந்த வீடு வேண்டும் என்று பலர் நினைத்தாலும் எல்லோராலும் அதை செய்து கொள்ள முடியவில்லை காரணம் அதற்கான கிரக நிலைகள் அவர்களுக்கு சரியாக அமையாது தான். அப்படிப்பட்டவர்கள் மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திர நாட்களில் வீட்டின் தென்மேற்கு மூலையில் விளக்கு ஒன்று வைத்து விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, மகா விஷ்ணுவின் வமன அவதாரத்தை மனதில் நினைத்து “சொந்த வீடு அமைய வேண்டும்” என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் வீடு வாங்கும் வாய்ப்பு பெருகும். 

சொந்த வீடு வாங்க விளக்கு பரிகாரம் 

வீடு, மனை, நிலம் ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பவர் செவ்வாய் பகவான். இவர் பூமிகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வமாக இருப்பவர் முருகப் பெருமான் தான். சொந்த வீடு, நிலம் வாங்க செவ்வாய் பகவானின் அருளும், முருகப் பெருமானின் அருளும் இருந்தாலே போதும். சிலர் நிலம் வாங்கி இருந்தாலும் அதில் வீடு கட்ட முடியாமல் தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருக்க காரணம் இவர்களின் ஆசி இல்லாததால் தான். அதற்கு  வீட்டில் பூஜையறையை சுத்தம் செய்து விட்டு, காமாட்சி விளக்கை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். பின் வாசனை மிகுந்த வெள்ளை நிற அல்லது சிவப்பு நிற பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின் 5 ரூபாய் நாணத்தை விளக்கிற்குள் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். மூன்றடி மண் கேட்டு மூன்று உலகையும் அளந்தவர் வாமனன். அவரையும், முருக பெருமானினையும் மனதார நினைத்து பால் பாயசம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து வீடு வாங்கும் யோகம் கிட்டும். 

குபேர பரிகாரம் 

செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரன், பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவர். குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும். அதனால் வியாழக்கிழமையன்று காலையில் எழுந்ததும் குளித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து வாசலில் பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும். பின் பூஜையறையை சுத்தம் செய்து விட்டு ஒரு பலகையை வைத்து அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பின் அதன்மேல் மஞ்சள், குங்குமம் வைத்த விளக்கை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பரிகாரத்தை காலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் நம்பிக்கையுடன் செய்தாலே போதும் சகல வசதிகளுடன் கூடிய சொந்த வீடு அமையும். 

இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க முடியாது என்பவன் கூட வீடு வாங்க யோகம்‌ தரும்‌ காமாட்சி விளக்கும் ஐந்து ரூபாய் நாணயமும்!

Recipes AMP · Quick view
View full