கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளவதற்கான சில எளிய வழிகள்!

- Advertisement -

சாஸ்திரங்களிலும் புராணங்களிலும்‌ கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கடவுளை முழுவதுமாக நம்பினாலும் இன்னும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று மிகவும் ஆணித்தனமாக நம்புவார்கள். ஆனால் கடவுளை நம்பி முழு மனதோடு பிரார்த்தனை செய்பவர்களுக்கு கடவுள் இருக்கிறார் என்பது ஏதோ ஒரு வழியில் அவர்களுக்கு தெரியும். கடவுள் எப்படி இருப்பார் எப்படி நம்மோடு பேசுவார் அதெல்லாம் அவநம்பிக்கை என்று கூறுபவர்கள் இருந்தாலும் உண்மையில் கடவுள் நம்மை பார்த்துக் கொண்டும் நம்மிடம் பேசிக் கொண்டும் தான் இருப்பார். அதை நம்மால் ஒரு சில விஷயங்களில் உணர முடியும். கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த உணர்வு தெரியும். அந்த வகையில் கடவுள் இருக்கிறார் என்பதற்கும் அவர் நம்மோடு பேசுகிறார் என்பதற்கும் ஒரு சில அறிகுறிகள் இருக்கிறது அந்த அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

கடவுள் நம்முடன் தான் இருக்கிறார் என்பதை உணர்வதற்கான சில அறிகுறிகள்

காலை 3 மணி முதல் 5 மணி வரை அலாரம் எதுவும் வைக்காமலேயே நீங்கள் காலையில் கண்வழிக்கிறீர்கள் என்றால் கடவுள் உங்களுடன் இருந்து உங்களை சரியான பாதையில் கொண்டு செல்கிறார் என்று அர்த்தம்

- Advertisement -

கனவில் அடிக்கடி மந்திரம் சொல்லும் சத்தம் சங்கு ஒலிக்கும் சத்தம் மணி அடிக்கும் சத்தம் போன்றவை கேட்டால் கடவுள் உங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்ற அர்த்தம். அதனால் நீங்கள் கெட்ட விஷயங்களில் சிக்கி இருந்தால் அனைத்தும் சரியாகி நீங்கள் நல்வழியில் செல்வீர்கள்

கடவுள் இருப்பதை உணரும் சில நபர்கள்

புனிதமான தூய்மையான ஆத்மாக்களான ஐந்தறிவு ஜீவன்களான செல்லப்பிராணிகள் ஒருவரை கண்டவுடன் ஆசையாய் வந்து கட்டி அணைத்து அவர்களுடன் விளையாடுகிறது என்றால் அந்தச் செல்லப் பிராணிகளின் மூலமாக கடவுள் அவர்களுடனே இருக்கிறார் என்று அர்த்தம்.

நமக்கு உதவி தேவைப்படும் பொழுது நமக்கு யாராவது உதவினால் அவர்கள் தான் கடவுள். கடவுள் தான் மனிதர்களின் ரூபத்தில் வந்திருக்கிறார் என்று சொல்வார்கள். அந்த வகையில் நீங்கள் கடன் பிரச்சினைகள் அல்லது மற்ற ஏதேனும் ஒரு பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் அந்த நேரங்களில் உங்களை யாராவது வந்து காப்பாற்றி உங்களுக்கு தேவைப்படும் அறிவுரைகளை வழங்கி உங்களுடனே இருந்தால் அவர்கள் ரூபத்திலும் கடவுள் உங்களுடன் இருக்கிறார் என்று அர்த்தம்

-விளம்பரம்-

கடவுள் பேசுவதை உணரும் சில நபர்கள்

நீங்கள் மன அழுத்தம் கஷ்டங்கள் கவலைகள் என சோகத்தில் இருக்கும் போது சோகத்தில் தனியாக பேசும் போது உங்களின் அந்த சூழ்நிலையை மாற்றும் படியாக ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் கடவுள் உங்களுடனே இருந்து நீங்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருப்பார் என்று அர்த்தம். அப்பொழுது கடவுள் உங்களை அந்த மனக்கஷ்டத்திலிருந்து நீக்க உங்கள் சூழ்நிலையை மாற்றி இருப்பார்

சில சமயங்களில் தனிமையில் இருக்கும் போது உங்களுடன் யாராவது ஒருவர் பேசுவதாகவோ அல்லது உங்களுடன் யாரோ ஒருவர் இருப்பது போல அறிகுறிகள் தோன்றினால் கடவுள் உங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம்