இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ருசியான புடலங்காய் விதை சட்னி இப்படி செஞ்சி பாருங்க!

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்த

By Prem Kumar · 15/11/2023

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள்.

இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புடலங்காய் விதைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், புடலங்காய் விதை கொண்டு சட்னி செய்யலாம். இந்த புடலங்காய் விதை சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது. இது தவிர அசிடிட்டி, மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்களும் சாப்பிடலாம்.

இந்த சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புடலங்காய் விதை, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இவை எளிதாக செய்யக்கூடியது மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் புடலங்காய் விதை சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. அதனால் புடலங்காய் விதை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full