ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வையுங்கள்.
இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இதுவரை நீங்கள் எத்தனையோ சட்னிகளை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புடலங்காய் விதைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டுள்ளீர்களா? ஆம், புடலங்காய் விதை கொண்டு சட்னி செய்யலாம். இந்த புடலங்காய் விதை சட்னி இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது நல்லது. இது தவிர அசிடிட்டி, மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்களும் சாப்பிடலாம்.
இந்த சட்னிக்கு அடிப்படையில் பூண்டு, புடலங்காய் விதை, கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை தேவைப்படுகிறது. இவை எளிதாக செய்யக்கூடியது மற்றும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஊட்டச்சத்து குணங்களும் அதில் நிறைந்துள்ளன. நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையை சரியாக கையாண்டால் எந்த நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் புடலங்காய் விதை சட்னியில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. அதனால் புடலங்காய் விதை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.
புடலங்காய் விதை சட்னி | snake gourd seed chutney recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 புடலங்காய்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 3 பச்சை மிளகாய்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
தாளிக்க :
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் உளுந்து
- 2 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் புடலங்காயை நறுக்கி உள்ளே சதையுடன் இருக்கும் விதையை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, எடுத்து வைத்துள்ள புடலங்காய் விதையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- புடலங்காய் சிறிதளவு வதங்கினதும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
- இவை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் சட்னியை ஒரு பவுளுக்கு மாற்றி கொள்ளவும். ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் இப்போது சுவையான புடலங்காய் விதை தேங்காய் சட்னி தயார்.
- இந்த சட்னி சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.