என்ன கூட்டு பொரியல் செய்வது யோசனையா ? ருசியான புடலங்காய் மசாலா இப்படி செய்து பாருங்க!
இந்த புடலங்காய் மசாலா 10 நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். அதுவும் புடலங்காயை தோல் சீவி வெட்டி வேகவைத்து செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் தான் எடுக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த காய் சுவையாக செய்து ஒரு முறை ருசித்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது
இந்த புடலங்காய் மசாலா 10 நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். அதுவும் புடலங்காயை தோல் சீவி வெட்டி வேகவைத்து செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் தான் எடுக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த காய் சுவையாக செய்து ஒரு முறை ருசித்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது இந்த ரெசிப்பி ரொம்பவும் உபயோகமாக இருக்கும்.
புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. இந்த புடலங்காய் மசாலா செய்வதற்கு எதையும் அரைக்க வேண்டாம், அப்படியே வேக வைத்து விடலாம். எல்லா வகையான காரசாரமான சாப்பாட்டிற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் புடலங்காய் மசாலா ரெசிபி எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.