என்ன கூட்டு பொரியல் செய்வது யோசனையா ? ருசியான புடலங்காய் மசாலா இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இந்த புடலங்காய் மசாலா 10 நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். அதுவும் புடலங்காயை தோல் சீவி வெட்டி வேகவைத்து செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் தான் எடுக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த காய் சுவையாக செய்து ஒரு முறை ருசித்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது இந்த ரெசிப்பி ரொம்பவும் உபயோகமாக இருக்கும்.

-விளம்பரம்-

புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. இந்த புடலங்காய் மசாலா செய்வதற்கு எதையும் அரைக்க வேண்டாம், அப்படியே வேக வைத்து விடலாம். எல்லா வகையான காரசாரமான சாப்பாட்டிற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் புடலங்காய் மசாலா ரெசிபி எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -
Print
No ratings yet

புடலங்காய் மசாலா | Snake guard Masala Recipe In Tamil

காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது இந்த ரெசிப்பி ரொம்பவும் உபயோகமாக இருக்கும். புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும், குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. இந்தபுடலங்காய் மசாலா செய்வதற்கு எதையும் அரைக்க வேண்டாம், அப்படியே வேக வைத்து விடலாம்.எல்லா வகையான காரசாரமான சாப்பாட்டிற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்தபுடலங்காய் மசாலா ரெசிபி எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின்மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Snake Guard Masla
Yield: 4
Calories: 234kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ புடலங்காய்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 கொத்து  கறிவேப்பிலை
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

அரைக்க

  • 3 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு பல்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 கப் தேங்காய்

செய்முறை

  • புடலங்காய் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • அதன் பிறகு நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மூடி வேகவைக்கவும்.
  • புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து கலந்து விடவும். காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை இல்லாதபோது பொரியலை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • சுவையான புடலங்காய் மசாலா தயார்

Nutrition

Serving: 400g | Calories: 234kcal | Carbohydrates: 43g | Protein: 13g | Fat: 2g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 325mg | Fiber: 3g | Sugar: 1.5g