சோமவாரத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்! சோமவாரம் உண்டான கதை இது தான் !
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். கார்த்திகை சோமவார தினத்தில் நம்பிக்கையோடு சிவ ஆலயம் சென்று நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார உச்சரித்து பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும
கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். கார்த்திகை சோமவார தினத்தில் நம்பிக்கையோடு சிவ ஆலயம் சென்று நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார உச்சரித்து பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும் சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் தீவினைகள் விலகும் கவலைகள், கடன் பிரச்சினைகள் நீங்கும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. திங்கட்கிழமை விரதம் இருப்பதனால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம்.
கார்த்திகை மாத சிறப்பு
தமிழ் மாதங்கள் பன்னிரண்டிற்கும் தனித்தனியான சிறப்பு உண்டு. அந்த வகையில் கார்த்திகை மாத மகுடச் சிறப்பான கார்த்திகை விளக்கைப் போல் அம்மாதத்தின் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவாரம் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுவதற்குப் புராணப் பாங்கான கூடுதல் கருத்தாடல் ஒன்று உண்டு. பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை, மார்கழி என்ற இரு மாதங்களும் சூரியனது ஆதிக்கம் இல்லாத குறையுடைய மாதங்கள் என்பதால் அவ்விரு மாதமும் சோமவார விரதம் கடைப்பிடிக்கத் தகுதியற்றனவாகும்.
கார்த்திகை மாதம் சோமவார விரதம் இருப்பதினால் பலன்கள்
இந்த சோமவார விரதத்தை ஆண்களும், பெண்களும் இருக்கலாம். இந்த விரதம் மேற்கொள்ளும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறும். தாயாருக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளும் நீங்கும். சோமவார நாளில் சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும்.
கார்த்திகை மாத சோமவார வரலாறு
ஒரு முறை தட்சன் சந்திரனுக்கு சாபம் அளித்து விட்டான். அந்த சாபத்தால் சந்திரன் கொடிய நோயால் அவதிப்பட்டான். தன் சாபம் நீங்கி குணமாக சந்திரன், கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமையிலும் சிவபெருமானை நினைத்து விரதம் மேற்கொண்டான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.
சோமவார விரத முறை
கார்த்திகை முதல் திங்கட்கிழமை தொடங்கி கடைசி திங்கள் அன்று இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். திங்கட்கிழமை விடியற் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு, பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கி, சிவபெருமானை வணங்கி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் செய்து, சிவ புராணம் படிக்கலாம். பிறகு கோவிலுக்கு சென்று சிவனுக்கு வில்வத்தாலும், சக்திக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். அத்துடன் கோவிலுக்கு வரும் அன்பர்களுக்கு உங்களால் முடிந்ததை பிரசாதமாக கொடுக்கலாம். மாலையில் விளக்கேற்றி தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். ரொம்பவே எளிமையான விரதமுறை தான் இது. ஆனால் பலனை பார்த்தால் அதிசயிக்கும் வண்ணம் பெரிதாகவே இருக்கும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் அனைத்து பாவங்களும் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கம், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் கார்த்திகை சோமவார விரதம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இதனையும் படியுங்கள் : உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர வேண்டுமா ? இதுவரை நீங்கள் அறிந்தீராத குபேரர் பற்றிய வழிபாடு!