உங்கள் வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர வேண்டுமா ? இதுவரை நீங்கள் அறிந்தீராத குபேரர் பற்றிய வழிபாடு!

- Advertisement -

பொதுவாக வீட்டில் பலரும் குபேரவை வைத்து வழிபடுவதற்கு காரணம் குபேரர் இருக்கும் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பதற்காகவும் வாஸ்து சார்ந்த பிரச்சினைகள் இருக்காது என்பதற்காகவும் தான். ஆனால் நாம் குபேர பாகவானை வணங்கக்கூடிய முறைகளை முழுவதுமாக தெரிந்து கொண்டு சரியான முறையில் குபேர பகவானை வணங்கி வந்தால் நம் வீட்டில் பண வரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும் தவிர என்றைக்குமே பணக்கஷ்டம் வராது அந்த அளவிற்கு குபேர நம்மை பார்த்துக் கொள்வார். அதனால் இன்றைக்கு ஆன்மீகம் குறித்த தொகுப்பில் குபேரர் பற்றி அறிந்திடாத சில விஷயங்களை பற்றி பார்க்காலம்.

-விளம்பரம்-

எதற்காக குபேரரை வழி பட வேண்டும்

இந்த பூமியில் இருக்கும் அனைத்து செல்வத்திற்கும் சொந்தக்காரி என்றால் அது மகாலட்சுமி தாயார் ஒருவரை. அப்படி இருக்க எப்படி குபேரர் நமக்கு செல்வத்தை அளித்த தர போகிறார் என்ற கேள்வி வரலாம். மகாலட்சுமி தயாரின் அனைத்து செல்வ வளங்களையும் பாதுகாப்பாக காப்பாற்றி அதை நமக்கு கொடுப்பதே குபேர பகவானின் செயல். அந்த வகையில் நம் வீட்டின் பூஜை அறையில் குபேர பகவானை வைத்து முறையாக வழிபாடு செய்து வந்தால் நமது வீடும் செல்வ செழிப்புடன் சிறப்பாக இருக்கும். நாம் குபேர பகவானை எப்படி வழிபட்டு வந்தாலும் அவரை வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

குபேரர் சிலை

பொதுவாக நம் வீட்டில் விக்ரகங்களை வைத்து வழிபடும் போது விக்கிரங்களை வைத்து வழிபடுவதற்கு என சில முறைகள் உள்ளது. அந்த முறைகளை சரியாக செய்து விரவில்லை என்றால் நமக்கு தான் பல பிரச்சனை வரும். அது போல தான் நாம் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடும் குபேர பகவான் சிலை கட்டைவிரல் அளவில் தான் இருக்க வேண்டும் அதற்கு மேல் இருக்கும் குபேர பகவானை வைத்து வீட்டில் வழிபடுவதில் ஒன்றும் தவறில்லை அவரை சரியாக பராமரித்து முறையாக வழிபடவில்லை என்றால் நம் வீட்டில் தான் கஷ்டம் தலை விரித்து தாண்டவம் ஆடும். வரவேற்பு அறையில் குபேரர் சிலை வைக்கிறீர்கள் என்றால் அதை நீங்கள் எவ்வளவு பெரிய சிலையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

குபேரர் சிலை நிறம்

அப்படி நம் வீட்டிலும் செல்வ கடாட்சம் நிறைந்து இருக்க குபேர சிலையை நம் வீட்டில் வைக்கும்போது அந்த குபேரர் சிலை பச்சை நிறத்திலும் அல்லது தங்க நிறத்திலும் இருக்குமாறு தான் வைக்க வேண்டும். இப்படி இந்த குபேரர் இருக்கும் இடத்தில் செல்வம் பெருத்து கொட்டி கிடக்கும். ஏன் செல்வம் மழையாகவே பொழிந்து கொண்டிருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குபேரர் சிலையில் அவரின் வயிற்று பக்கத்தில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அந்த ஐந்து ரூபாய் நாணயத்தில் ஐந்து என்ற எண் நம்மை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

வயிற்று பகுதியை தடவி கொடுக்க வேண்டும்

இப்படி 5 ரூபாய் நாணயம் வைத்த பின் குபேரவை தினமும் வயிற்றுப் பகுதியில் மென்மையாக தடவி கொடுக்க வேண்டுமாம். அப்படி நாம் வைத்திருக்கும் குபேர பகவானின் சிலையின் வயிற்றுப் பகுதியை அவ்வப்போது தடவி கொடுக்க வேண்டும் அதாவது லேசாக கையை வைத்து வருட வேண்டும். ஏனென்றால் குபேரர் சிலை வயிறை வருடுவது குபேரரின் வயிற்றையை வருடி கொடுப்பதற்கு சமம். இப்படி செய்வதன் மூலம் குபேர பகவான் சிரிக்கும் போது அவர் கையில் இருக்கும் செல்வங்கள் நம் வீட்டில் கொட்டும் என்பது ஐதீகம். அதனால் தான் குபேர பகவானின் சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள் அடிக்கடி அவரின் வயிற்றுப் பகுதியில் தடவி கொடுப்பார்கள்.

-விளம்பரம்-

கைதட்ட வேண்டும்

குபேர பகவானின் வயிற்று பகுதியை தடவி ஒரு கொடுப்பது போல எப்பொழுதும் வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது குபேர பகவானின் முன்பு கைகளை தட்டி ஒலி எழுப்ப வேண்டுமாம். இப்படி நாம் செய்யும்போது குபேர பகவான் சந்தோஷம் அடைவாராம் இப்படி குபேர பகவானை நாம் சந்தோஷப்படுவது மூலமாகவும் நமது வீட்டில் செல்வம் மழை கொட்டுமாம் அதனால் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது இதை தவறாமல் செய்ய வேண்டும் அல்லது சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜையை முடித்த பின்பும் இதை நாம் செய்து வரலாம்.

நம்பிக்கையுடன் செய்யுங்கள்

இப்படி நீங்களும் வீட்டின் வாஸ்து சார்ந்த பிரச்சினைகளுக்காகவும், உங்கள் வீட்டின் பண வரவு வேண்டும் என்பதற்காக இல்லை வேறு சில காரணங்களுக்காகவும் குபேரர் சிலை வணங்கினாலும் மேலே சொன்னது போல் இந்த விஷயங்களை மனதில் நினைத்துக் கொண்டு பச்சை அல்லது தங்க நிறத்தில் உள்ள குபேர சிலையை வாங்கி, மேலே சொன்ன வழிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு அனைத்து விஷயங்களும் நீங்களும் செய்து பாருங்கள், உங்கள் வீட்டிலும் பணம் மழை பெய்யும் செல்வங்கள் மலை போல் குவிந்து கிடக்கும். இதை நீங்கள் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here