Home சைவம் உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள்...

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அங்கிருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அவ்வகையில் இங்கு நாம் காண இருப்பது பர்மாவில் செய்யப்படும் அத்தோ முறை. இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு அதற்கு மாலை நேரங்களில் அத்தோ கடைகளில் நாம் காண கூடிய கூட்டமே சாட்சி. நூடுல்ஸ் உடன் சேர்க்கப்படும் வெட்டிய முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றுடன், உப்பு, தண்ணீர், பூண்டு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் அத்தோவின் சுவை அலாதியானது.

-விளம்பரம்-

பர்மா உணவு முறையை சார்ந்த இவை மெல்ல மெல்ல பர்மா மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதற்கு காரணம் இதனின் வித்தியாசமான சுவை தான். இதை விரும்புபவர்கள் பெரும்பாலும் இதை அத்தோ கடைகளில் தான் வாங்கி சுவைக்கிறார்கள். ஆனால் இதை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வெகு சுலபமாக செய்து விடலாம். சமைக்கத் தெரியாதவர்கள் கூட சிரமமின்றி செய்யக்கூடிய உணவு தான் இது. மேலும் நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று உணவும் கூட. வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ என்னும் பர்மா உணவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

அத்தோ | Atho Recipe In Tamil

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் அங்கிருக்கும் சமையல் முறைக்கேற்ப பல மாற்றங்களோடு செய்யப்படுகிறது. அவ்வகையில் இங்கு நாம் காண இருப்பது பர்மாவில் செய்யப்படும் அத்தோ முறை. இதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு அதற்கு மாலை நேரங்களில் அத்தோ கடைகளில் நாம் காண கூடிய கூட்டமே சாட்சி. நூடுல்ஸ் உடன் சேர்க்கப்படும் வெட்டிய முட்டைக்கோஸ், வெங்காயம் இவற்றுடன், உப்பு, தண்ணீர், பூண்டு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படும் அத்தோவின் சுவை அலாதியானது. பர்மா உணவு முறையை சார்ந்த இவை மெல்ல மெல்ல பர்மா மக்கள் இடம் பெயர்ந்த நாடுகளில் எல்லாம் பிரபலமடைந்தது. அதற்கு காரணம் இதனின் வித்தியாசமான சுவை தான்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Atho
Yield: 2 People
Calories: 185kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் நூடுல்ஸ்
  • 1/2 கப் முட்டைக்கோஸ்
  • 2 பெரிய வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 கேரட்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 8 வர ‌மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு, எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் முட்டைகோஸ், கேரட்டை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகாயை சேர்த்து வறுத்து அதனை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட், வதக்கி வைத்த பூண்டு, புளி கரைசல், அரைத்து வைத்துள்ள மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான அத்தோ தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 185kcal | Carbohydrates: 3.1g | Protein: 10.2g | Fat: 5.2g | Saturated Fat: 1.9g | Sodium: 115mg | Potassium: 138mg | Fiber: 7.8g | Calcium: 39mg | Iron: 6.2mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!