Home ஆன்மிகம் நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே வெயில் காலமும் தொடங்கி விடும் அப்பொழுது இருந்து சூரிய பகவான் அனைவரையும் சுட்டெரித்து விடுவார் அதிலும் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் போதும் சூரிய பகவான் மிகவும் உக்கிர நிலையில் இருப்பார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பரணி நட்சத்திரத்தில் துவங்கி சூரிய பகவான் கிருத்திகை நட்சத்திரத்திற்கு பயணிக்கும் 25 நாட்கள் கொண்ட காலகட்டத்திலேயே அக்னி நட்சத்திரம் என்று அழைக்கிறோம் இதனை கத்திரி வெயில் காலம் என்றும் அழைப்பதுண்டு. புராணங்களின்படி அக்னி பகவான் தன்னை புதுப்பிப்பதற்காக காண்டவ வனத்தை எரித்த காலகட்டத்தையே நாம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கிறோம்.

அக்னி நட்சத்திரத்தில் நல்ல காரியங்கள்

பொதுவாக வெயில் காலத்தில் அதிலும் அக்னி நட்சத்திரத்தில் எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்யக்கூடாது அப்படி செய்தால் தோஷங்கள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனாலும் இந்த அக்னி நட்சத்திரத்தில் ஒரு சில நல்ல விஷயங்களை மட்டும் செய்தால் தோஷம் எதுவும் ஏற்படாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதே வகையில் அக்னி நட்சத்திர காலத்தில் தெய்வ வழிபாடு மிகவும் சிறந்தது எனவும் இந்த காலகட்டத்தில் செய்யப்படும் வழிபாட்டிற்கு அதிக வலிமை எனவும் பெரியவர்கள் கூறுகிறார்கள் எனவே இந்த அக்னி நட்சத்திரத்தில் நாம் நல்லது நடப்பதற்காக எந்த தெய்வத்தை வழிபடுவது சிறந்தது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் என்றாலே வெயில் மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால் அது மட்டும் இல்லாமல் இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தெய்வ அருளை நாம் பெற்றால் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும் அக்னி நட்சத்திர காலத்தில் அதற்கு ஏற்ற தெய்வங்களை நாம் சரியான விதத்தில் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் சரியாகும். அக்னி நட்சத்திரத்தில் வீரம் தைரியம் தன்னம்பிக்கை நம்பிக்கை என அனைத்துமே அதிகரிக்க எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

சூரியன் அவருடைய முழு கதிர்வீச்சுகளையும் பூமியில் பரப்பக்கூடிய காலமே அக்னி நட்சத்திரம் என்று கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரையில் 25 நாட்கள் இருக்கும். நமக்கு ஏதாவது தோஷங்கள் இருந்தால் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீவளியால் அவதரித்த முருகப்பெருமானை வழிபட வேண்டும் அப்படி நாம் முருகப் பெருமானை வழிபட்டால் மதிப்பு மரியாதை மகிழ்ச்சி அளவில்லாத செல்வ வளம் தைரியம் என வாழ்க்கையில் அனைத்துமே அதிகரிக்கும்.

-விளம்பரம்-

அக்னி நட்சத்திர வழிபாட்டின் சிறப்பு

வெப்பம் தணிந்து வசந்த காலம் துவங்குவது அக்னி நட்சத்திரத்திற்கு பிறகு தான் அதனால் தான் வைகாசி விசாக விழா முருகனுக்காக கொண்டாடப்படுகிறது நெருப்பிலிருந்து தோன்றி மகிழ்ச்சியை கொடுக்கின்ற தெய்வம் முருகப்பெருமான் என்பதால் தான் பலரும் இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். தமிழ் கடவுளான முருகப்பெருமானை நாம் வழிபட்டு வந்தாலே அவருடைய அன்னை மற்றும் தந்தையான சிவன் மற்றும் பார்வதியின் அருள் என்றும் நமக்கு கிடைக்கும் எனவே அக்னியில் தோன்றிய முருகப்பெருமானை வழிபடுவது அக்னி நட்சத்திர காலகட்டத்தில் மிகவும் சிறப்பானது.

அக்னி நட்சத்திரத்தில் முருகனை வழிபடக்கூடிய முறை

முருகப்பெருமானுடனே இருக்கக்கூடிய மயிலிறகு மயில் வேல் அனைத்திற்கும் தனி சிறப்பு உண்டு என்று சொல்லலாம் நாம் ஒவ்வொன்றாக வழிபட்டால் நமக்கு ஒவ்வொரு விதமான நன்மைகள் கிடைக்கும்.

மயிலிறகு வழிபாடு

முருகப்பெருமானுடைய வாகனம் மயில் என்பதால் முருகப் பெருமானுக்கு இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் மயிலிறகுகளை படைத்த வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பு. நாம் இந்த வழிபாட்டை செய்தால் முருகப்பெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கேட்டவர்களுக்கு அவர்களுடைய விருப்பங்களை அனைத்தும் நிறைவேற்றி அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை தந்து வளர்ச்சியையும் கொடுப்பார் அதனால் முழு மனதோடு மயிலிறகு வழிபாடு செய்து முருகப்பெருமானுடைய முழு அருளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

வேல் வழிபாடு

முருகன் இன்றி வேல் இல்லை வேல் இன்றி முருகன் இல்லை. சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் இந்த வேலை தான் பயன்படுத்தி இருப்பார். தீமைகளை அழித்து தேவர்களை காத்த இந்த வேல் பக்தர்களாகிய நம்மையும் காக்கும் என்பது நம்பிக்கை எனவே செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானின் அடையாளங்களில் ஒன்றான வேலை வாங்கி வந்து அதனை வழிபடுவதால் நமக்கு உடல் மற்றும் மனதும் வலிமையாகும். வாழ்வில் நமக்கு எந்தவிதமான பிரச்சனைகளாக இருந்தாலும் பயமாக இருந்தாலும் அவை அனைத்தும் விலகி துன்பங்களை தந்தவர்களும் நம்மிடமிருந்து விலகிச் செல்வார்கள்.

கிரிவலம்

மாதம் மாதம் வரக்கூடிய பௌர்ணமியில் முருகப்பெருமானுக்கு கிரிவலம் வருவது மிகவும் சிறந்தது. அந்த வகையில் இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் முருக பெருமானுடைய எந்த கோவிலாக இருந்தாலும் மலைகளை சுற்றி வந்து வழிபட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக பெண்கள் முருகனுக்கு மிகவும் பிடித்தமான கதம்ப மலர்களை அணிந்து கொண்டு மழையை சுற்றி வந்தால் மலையில் இருந்து வரக்கூடிய மூலிகை காற்று வாசனை அனைத்தும் நம் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

முருகப்பெருமானுக்கு அபிஷேகம்

அக்னி நட்சத்திர காலகட்டத்தில் முருகப்பெருமானுக்கு இருக்கக்கூடிய அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை கோவிலில் தண்ணீரால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். பழனி மலையில் உள்ள நவபாசன முருகன் சிலையில் படுகின்ற அந்த தண்ணீர் தீர்த்தமாக சேமிக்கப்பட்டு அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் ஏனென்றால் இந்த தீர்த்தம் மிகவும் புனிதமானது இதனை குடித்தால் நமக்கு இருக்கும் நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இந்த தீர்த்தத்தை நம் வீட்டில் வைத்தால் முருகப்பெருமானுடைய அருள் நம் வீட்டில் எப்பொழுதும் நிறைந்திருக்கும். மேலும் முருக பெருமானுக்கு எந்த கோவிலாக இருந்தாலும் அங்கு அபிஷேகத்திற்காக பால் பன்னீர் தயிர் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் மிகவும் சிறந்தது.

இதனையும் படியுங்கள் : சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?