சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவிலின் சிறப்புகள்!!
முருகனுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான சக்தி கொண்ட சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்செந்தூர் முருகனுக்கு இருக்கக்கூடிய அதே சக்தி சென்னையில் இருக்கக்கூடிய மிருகருக்கும
முருகனுடைய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையான சக்தி கொண்ட சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்செந்தூர் முருகனுக்கு இருக்கக்கூடிய அதே சக்தி சென்னையில் இருக்கக்கூடிய மிருகருக்கும் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த செந்தில் ஆண்டவன் நினைத்தால் தான் திருச்செந்தூர் முருகனை கூட தரிசனம் செய்ய முடியும். அதேபோல் தான் இந்த முருகன் நினைத்தால் மட்டுமே சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் நம்மால் செல்ல முடியும் அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திருச்செந்தூர் செல்வதற்கு அமைய வேண்டிய காலநேரம்
தோஷங்கள் விலக, திருமணம் விரைவில் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வேலை வியாபாரம் நல்ல முன்னேற்றத்துடன் செல்ல திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பார்கள். ஆனால் அதற்கான காலமும் நேரமும் கைக்கூடி வராது. சென்னையில் இருக்கும் இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து பாருங்கள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும். திருச்செந்தூருக்கு சென்று செந்தில் ஆண்டவனை தரிசனம் செய்யக்கூடிய பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும்.
சென்னை திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பு
இந்த கோவிலில் பணிபுரியும் குருக்கள் பக்தர்கள் அனைவருமே இந்த கோவிலில் நடந்த நிறைய விஷயங்களை பற்றி கூறியிருக்கிறார்கள் அவை எல்லாம் நம்மை வியப்படைய வைக்கும். இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வேண்டியது எல்லாம் அப்படியே பலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் ஒரு சிறப்பு பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நாணயத்தையும் மஞ்சள் துணியில் முடிந்து இந்த கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு அடியில் வைத்து வேண்டினால் நினைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
வீட்டு பூஜை அறையில் முதலில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். சிறிதளவு மஞ்சள் துளை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு வெள்ளை துணியை அந்த மஞ்சள் கலவையில் நனைத்து நிழலில் உலர வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து குலதெய்வத்தை நினைத்து முடிந்து கொள்ள வேண்டும். முருகப்பெருமானை நினைத்து உங்களுடைய வேண்டுதலை கூறி முடிச்சை தயார் செய்து கொள்ள வேண்டும்.
முடிச்சை செலுத்த வேண்டிய இடம்
சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் போது அந்த முடிச்சை கையோடு எடுத்து சென்று கோவில் கொடி மரத்திற்கு அடியில் வைத்து உங்களுடைய வேண்டுதலை முருகா பெருமானிடம் கூறி மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மறுபடியும் அந்த முடிச்சை எடுத்துக் கொண்டு வந்து வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களுடைய வேண்டுதல் நிறைவடைந்த பிறகு அந்த முடிச்சை கொண்டு போய் திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் அல்லது சென்னையில் இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் செலுத்தி விட வேண்டும்.
திருச்செந்தூர் முருகன் கோவில் விசேஷங்கள்
திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகன் கோவிலில் என்னென்ன விசேஷங்கள் எல்லாம் கொண்டாடப்படுகிறது அவை எல்லாம் சென்னையில் இருக்கக்கூடிய இந்த கோவிலிலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுரசம்காரம், பால்குடம் எடுப்பது, தைப்பூச விசேஷம், வைகாசி விசாகம், சஷ்டி என அனைத்து விசேஷங்களும் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் படி இங்கும் நடக்கிறது. முருகனுக்கு உண்டான அனைத்து விசேஷ தினங்களிலும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. சென்னையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி சென்னைக்கு அருகில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி நிச்சயமாக இந்த முருகப்பெருமானை தரிசனம் செய்ய மறவாதீர்கள். உங்களுடைய கஷ்ட காலம் தீர வேண்டும் என்றால் இந்த பரிகாரத்தை வழிபாட்டை முருகன் கோவிலுக்கு சென்று செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சொந்த வீடு கனவை நினைவாக்கும் சிறுவாபுரி முருகர் திருப்புகழ்