சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் சொந்த வீடு கட்டும் யோகம் சீக்கிரத்தில் அமையும் என்று அனைவரும் அறிந்ததே ஆனால் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அனைவராலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செல்ல முடியவில்லை என்றால் வீட்டில் இருந்தபடியே வீட்டின் பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானை சிறுவாபுரி முருகனாக நினைத்து செவ்வாய்க்கிழமையில் ஒரு பதிகத்தை படித்தால் நிச்சயமாக சீக்கிரத்திலேயே சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் கைகூடிவரும்.
செவ்வாய்க்கிழமை வழிபாடு

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் காலை 6:00 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் காலையில் செய்ய முடியாதவர்கள் மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் பூஜையறையில் உள்ள முருகர் சிலை அல்லது திருஉருவப்படத்திற்கு சிவப்பு நிற செவ்வரளி பூக்களை வாங்கி வைக்க வேண்டும். வீட்டில் வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து குங்கும பொட்டு வைத்துக் கொள்ளலாம். பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பிறகு இந்த பதிகத்தை மனதார படிக்க வேண்டும்.
சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய திருப்புகழ்
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மண மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகில்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையிலுள பேருமஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூறமைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியால அண்டர்மகள் மணவாள புந்திநிரை அறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடுபொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூபதண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே
என்கின்ற முருகனுடைய இந்த திருப்புகழை உச்சரிக்க வேண்டும் உச்சரிப்பதில் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் இந்த பாடலை நீங்கள் மொபைல் போனில் ஒலிக்க செய்யலாம் இரண்டு மூன்று முறை இதை காதால் கேட்டு அதன் கூடவே சேர்ந்து நீங்கள் படிக்கலாம் நிறைய முறை பயிற்சி செய்தால் சுலபமாக படித்து விடலாம் சிறுவாபுரி முருகனை மனதார நினைத்து இந்த பாடலை பாடி வழிபடுங்கள் சீக்கிரத்திலேயே சொந்த வீடு கட்டுவதற்கான யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
சிறுவாபுரி முருகன் கோவில் வழிபாடு
என்றாவது ஒருமுறை உங்களால் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்ல முடிந்தால் செவ்வாய்க்கிழமை என்று சிறுவாபுரி கோவிலுக்கு சென்று முருகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் வாங்கி கொடுத்து செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்து திருப்புகழ் புத்தகத்தை முருக பெருமான் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து அதனை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை படித்து வந்தால் இன்னும் சிறப்பானது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் போக முடிந்தால் இன்னும் சிறப்பானது. முடியாதவர்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த வழிபாட்டை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : ஒன்பது வாரம் தொடர்ந்து முருகரை இப்படி வனங்கினால் வேகமாக சொந்த வீடு கட்டுவீங்க!