Advertisement
ஆன்மிகம்

நீங்கள் வாங்க நினைத்த தங்கத்தை விட அதிகளவு தங்கம் வாங்க! ஒரு கைப்பிடி கோதுமை இருந்தால் போதும்!

Advertisement

பொதுவாக நாம் எந்த பொருளை வாங்கினாலும் நேரம், காலம் பார்த்து வாங்குவது தான் வழக்கம். அதிலும் தங்கம் வாங்கும் போது நாள், கிழமை, நட்சத்திரம் போன்ற பலவகையான நல்ல விஷயங்களை பார்த்து தான் வாங்க வேண்டும். அப்படி நாம் நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து வாங்கும் போது நாம் வாங்க கூடிய பொருட்கள் மேலும் மேலும் பெருகும். அந்த வகையில் நாம் தங்கம் வாங்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் வாங்கினால் வீட்டில் வாங்கிய தங்கம் தங்கி இருக்கும் அதேபோல் மேலும் மேலும் தங்கம் சேரும்.

தங்கம் மங்கலப்பொருள் மட்டுமல்ல, சேமிப்பும்கூட. ஆபத்து காலத்தில் தங்கம் உதவும் என்பதற்காகவே பெண்கள் நகைகளை சேகரிக்க விரும்புகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தங்கத்தை எப்படிப் பெருகச் செய்வது என்று ஒரு சிலரும், ஏற்கெனவே வாங்கியிருக்கும் கொஞ்சம் தங்கமும் அடகுக்குப் போகாமல் பாதுகாப்பது எப்படி என்று ஒரு சிலரும், அடகுக்குப் போன பொன்னை எப்படி மீட்பது என்றும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். தங்கம் வாங்குவதற்கும் சேர்ப்பதற்கும் சில பரிகாரங்களை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் ஒன்றனை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தங்கம் அதிகமாக சேர பரிகாரம்

தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சி, உழைப்பு என அனைத்தையும் நாம் கொடுக்க வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யும் போது இதற்கான வாய்ப்புகள் விரைவாகவும், வாய்ப்புகள் கை நழுவி போகாமலும் இருக்கும்.

இந்த பரிகாரத்தை நாம் சூரியபகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று

Advertisement
தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எழுந்தவுடன் குளித்து முடித்து உங்கள் காலை கடன் அனைத்தையும் முடித்துவிட்டு உங்கள் கைகளில் செம்பினால் ஆன டம்ளர் ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைப்பிடி அளவு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கோதுமையை 70937205 இந்த எண்ணை சொல்லிக்
Advertisement
கொண்டே ஒவ்வொன்றாக டம்ளரில் போடுங்கள். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இந்த எண்ணை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வம்

இந்த டம்ளர் நிறைந்த உடன் இந்த கோதுமையினை கொண்டு கோதுமை பாயாசம் அல்லது ஏதாவது இனிப்பு செய்து உங்கள் குலதெய்வத்தின் முன்னர் வைத்து மனதார உங்கள் வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக அழித்து விடுங்கள். நீங்கள் இந்த பரிகாரம் செய்யும் நாளன்று அசைவம் சமைக்காமல் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமது வீட்டில் தங்க நகை சேரும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் கோதுமை தானியம் என்பது சூரிய பகவானுக்கு மிகவும் உகந்ததாகும். இதனைக் கொண்டு அவரை நாம் வழிபட்டு வருவதனால் அவரது ஆசி கிடைக்கும். அதன் மூலம் சூரியன் போல ஜொலிக்கும் தங்கத்தினை நம்மளால் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

18 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago