Home ஆன்மிகம் நீங்கள் வாங்க நினைத்த தங்கத்தை விட அதிகளவு தங்கம் வாங்க! ஒரு கைப்பிடி கோதுமை இருந்தால்...

நீங்கள் வாங்க நினைத்த தங்கத்தை விட அதிகளவு தங்கம் வாங்க! ஒரு கைப்பிடி கோதுமை இருந்தால் போதும்!

பொதுவாக நாம் எந்த பொருளை வாங்கினாலும் நேரம், காலம் பார்த்து வாங்குவது தான் வழக்கம். அதிலும் தங்கம் வாங்கும் போது நாள், கிழமை, நட்சத்திரம் போன்ற பலவகையான நல்ல விஷயங்களை பார்த்து தான் வாங்க வேண்டும். அப்படி நாம் நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்து வாங்கும் போது நாம் வாங்க கூடிய பொருட்கள் மேலும் மேலும் பெருகும். அந்த வகையில் நாம் தங்கம் வாங்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் வாங்கினால் வீட்டில் வாங்கிய தங்கம் தங்கி இருக்கும் அதேபோல் மேலும் மேலும் தங்கம் சேரும்.

-விளம்பரம்-

தங்கம் மங்கலப்பொருள் மட்டுமல்ல, சேமிப்பும்கூட. ஆபத்து காலத்தில் தங்கம் உதவும் என்பதற்காகவே பெண்கள் நகைகளை சேகரிக்க விரும்புகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தங்கத்தை எப்படிப் பெருகச் செய்வது என்று ஒரு சிலரும், ஏற்கெனவே வாங்கியிருக்கும் கொஞ்சம் தங்கமும் அடகுக்குப் போகாமல் பாதுகாப்பது எப்படி என்று ஒரு சிலரும், அடகுக்குப் போன பொன்னை எப்படி மீட்பது என்றும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். தங்கம் வாங்குவதற்கும் சேர்ப்பதற்கும் சில பரிகாரங்களை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் ஒன்றனை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

தங்கம் அதிகமாக சேர பரிகாரம்

தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சி, உழைப்பு என அனைத்தையும் நாம் கொடுக்க வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யும் போது இதற்கான வாய்ப்புகள் விரைவாகவும், வாய்ப்புகள் கை நழுவி போகாமலும் இருக்கும்.

இந்த பரிகாரத்தை நாம் சூரியபகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எழுந்தவுடன் குளித்து முடித்து உங்கள் காலை கடன் அனைத்தையும் முடித்துவிட்டு உங்கள் கைகளில் செம்பினால் ஆன டம்ளர் ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைப்பிடி அளவு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கோதுமையை 70937205 இந்த எண்ணை சொல்லிக் கொண்டே ஒவ்வொன்றாக டம்ளரில் போடுங்கள். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இந்த எண்ணை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

குலதெய்வம்

இந்த டம்ளர் நிறைந்த உடன் இந்த கோதுமையினை கொண்டு கோதுமை பாயாசம் அல்லது ஏதாவது இனிப்பு செய்து உங்கள் குலதெய்வத்தின் முன்னர் வைத்து மனதார உங்கள் வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிரசாதமாக அழித்து விடுங்கள். நீங்கள் இந்த பரிகாரம் செய்யும் நாளன்று அசைவம் சமைக்காமல் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமது வீட்டில் தங்க நகை சேரும்.

-விளம்பரம்-

ஞாயிற்றுக்கிழமை மற்றும் கோதுமை தானியம் என்பது சூரிய பகவானுக்கு மிகவும் உகந்ததாகும். இதனைக் கொண்டு அவரை நாம் வழிபட்டு வருவதனால் அவரது ஆசி கிடைக்கும். அதன் மூலம் சூரியன் போல ஜொலிக்கும் தங்கத்தினை நம்மளால் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.