மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட சுவையான பிரெட் பக்கோடா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பி

By Prem Kumar · 29/8/2025

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிரெட் பக்கோடா. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடா சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. விருந்தினர்களின் வருகையின் போதும், குழந்தைகளின் சிணுங்கலின் போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடா தான்.

ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். அந்த வகையில் கடலைமாவு மற்றும் பிரெட் வீட்ல இருந்துச்சுனா சட்டுனு பத்து நிமிஷத்துல இந்த ரெசிபியை செய்து முடித்து விடலாம். டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் வீட்டுக்கு வந்ததும் இந்த மாதிரி ஒரு ரெசிபியை கொடுத்து சாப்பிட வச்சுட்டு அதுக்கப்புறம் படிக்க வைக்கலாம். இதுவரை பிரெட் வச்சு பிரெட் அல்வா, பிரெட் டோஸ்ட், பிரெட் சாண்ட்விச், பிரெட் ஆம்லெட் இந்த மாதிரி நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க.

அந்த வகையில இந்த ஒரு ரெசிபியையும் கண்டிப்பாக உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும். மாலை வேளையில் ஸ்நாக்ஸாக மட்டுமில்லாமல் காலையில் பிரேக்ஃபாஸ்டாகவும் சாப்பிடலாம். காலைல பிரேக்ஃபாஸ்ட்க்கு எப்பவுமே ஒரே மாதிரியா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு சிம்பிளான பிரெட் பக்கோடா செஞ்சு சாப்பிடலாம் கண்டிப்பாக டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த சிம்பிளான அதே நேரத்தில் சுவையான குழந்தைகளுக்கு ரொம்ப புடிச்ச பிரெட் பக்கோடா ரெசிபி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full