இந்த 2 இலைகள் வீட்டிற்கு வந்தால் போதும் தரித்திரம், தோஷம், வறுமை என அனைத்து தலைதெறிந்து ஒடும்!
பொதுவாக வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் அத்தகைய கஷ்டங்கள் சிலருக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் உலகத்தில் யாருமே இல்லாமல் நாம் தனியாகி விட்டது போன்ற உணர்வு பலருக்கும் வந்து விடும். தனியாக இருக்கும் நமக்கு ஆறுதல்
பொதுவாக வாழ்க்கையில் கஷ்டங்கள் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. ஆனால் அத்தகைய கஷ்டங்கள் சிலருக்கு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஏதாவது பிரச்சனை வந்து விட்டால் உலகத்தில் யாருமே இல்லாமல் நாம் தனியாகி விட்டது போன்ற உணர்வு பலருக்கும் வந்து விடும். தனியாக இருக்கும் நமக்கு ஆறுதல் கூற கூட யாரும் இல்லையே என மனம் ஏங்கும். தொட்டது எல்லாம் தோல்வியில் முடிந்து, கஷ்டத்திற்க மேல் கஷ்டம் வந்து கொண்டிருந்தால் நமக்கு நேரமே சரியில்லை என புலம்புவோம். ஆனால் இப்படி தீராத கஷ்டங்கள் வருவதற்கு நம்முடைய தரித்திரம் அல்லது கர்ம வினைகள் கூட காரணமாக இருக்கலாம்.
இன்றைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு வகையில் கஷ்டங்கள் வந்து கொண்டுதான் உள்ளது. வாழ்க்கையில் கஷ்டம் என்பது அனைவருக்கும் வரும். உலகில் யாருக்கும் கஷ்டம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஏன் அந்த கடவுளுக்கும் கஷ்டகள் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும். ஆகையால் கசடங்கள் இல்லையென்றால் வாழ்க்கையே வெறுத்து போய்விடும். நம்மிடம் இருக்கும் பிரச்சினை தீர ஏதாவது ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கி தவிக்கின்றனர். சரி கஷ்டங்கள் மற்றும் தரித்திரத்திலிருந்து தப்பித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
தரித்திரத்தை நீக்கும் செடிகள்
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இந்த இலை சுலபமாக கிராமப்புறங்களில் கிடைக்கும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இவை பயன்படுத்தப்படுகிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் ஒரு சிலருக்கு இது தெரியாது. இது மருத்துவத்துக்கு மட்டுமல்லாமல் ஆன்மிகத்திலும் பயன்படுகிறது. இதற்கு வெள்ளி பஸ்பம் என்ற பெயரும் உண்டு. இந்த செடியை வேரோடு பறிக்க கூடாது. அதனால் இதில் இருக்கும் இலை மட்டும் நமக்கு போதும். இந்த இலையை பறிக்கும் போது குல தெய்வத்தை மனதில் நினைத்து பறித்து கொள்ளுங்கள்.
குப்பைமேனி
இரண்டாவதாக குப்பைமேனி செடி. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடிதான், இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த குப்பைமேனி செடி மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் இந்த செடி தாந்திரீகத்திற்காகவும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் குப்பைமேனி செடி இருந்தால் அங்கே லட்சுமி கடாட்சம் பெருக் கெடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த குப்பைமேனி செடியையும் வேரோடு பிடுங்காமல் ஒரு கொப்பை மட்டும் ஒடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நாம் எடுத்து வைத்திருக்கும் இந்த இரண்டு செடிகளின் இலைகளையும் நன்கு தண்ணீரில் அலசி விட்டு வெள்ளிக்கிழமை அன்று இந்த இரண்டு செடிகளின் இலைகளை முறையாக வழிபட்ட பின் ஒரு பவுளில் போட்டு உங்கள் வீட்டில் திறந்த வெளியில் வைத்து விடுங்கள். இதனை நாம் வசிக்கும் வீட்டில் வைத்தால் நமக்கு உண்டாகும் பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று நம்பப்படுகிறது. இது சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம். இந்த இலை வாடியதும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இதனை மாற்றி விடுங்கள். தொடர்ந்து இந்த இலை உங்க வீட்டில் 48 நாட்கள் வரை இருக்கணும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் நம்பிக்கையுடன் செய்து வந்தாலே பல நாட்களாக தீராத பிரச்சனை, தீராத நோய், தீராத மனக்கஷ்டம், பணக்கஷ்டம், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள், மாங்கல்ய தடை இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் தீர்த்து விடும்.
இதனையும் படியுங்கள் : பெற்றோர் சொல்வதை கேட்டு குழந்தைகள் வளர! கற்றாழை விளக்கு பரிகாரம்!