ராகு மற்றும் செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அடிக்க போகும் சில ராசிகள்!

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகம் என்றால் அது ராகு தான். ராகு பகவான் ஒரு ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தில் இருப்பார்கள். ஆனால் சரியான இடத்தில் ராகு பகவான் இல்லை என்றால் அதனால் அந்த ஜாதகக்காரர்கள் படாத கஷ்டங்களையும் படுவா

By ·

ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகம் என்றால் அது ராகு தான். ராகு பகவான் ஒரு ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தில் இருப்பார்கள். ஆனால் சரியான இடத்தில் ராகு பகவான் இல்லை என்றால் அதனால் அந்த ஜாதகக்காரர்கள் படாத கஷ்டங்களையும் படுவார்கள். இந்த ஆண்டு வரக்கூடிய தீபாவளிக்கு முன்பாக ராகு மற்றும் செவ்வாய் பகவான் வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சியாக போகிறது எனவே இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்றாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல எதிர்பாராத நன்மைகள் எல்லாம் கிடைக்கும் அதனால் இந்த தீபாவளியும் கூட சிறப்பானதாகவே அமையும்.

செவ்வாய் பெயர்ச்சி

அக்டோபர் 20ஆம் தேதி கடகத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சியானார். ராகு பகவானும் தற்போது மீன ராசியில் உள்ளார் எனவே இதனால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகப் போகிறது. ராகு பகவானும் செவ்வாய் பகவானும் இணைவதால் மூன்று ராசிகாரர்களுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கப் போகிறது அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிஷப ராசி

இந்த நவபஞ்ச ராஜ யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் நல்ல லாபமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு மிகவும் நல்ல காலமாக அமையும் நல்ல வருமானமும் கிடைக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நிறைய நடக்கும் முக்கியமாக நல்ல வரன் கிடைத்து திருமணங்கள் கைகூடி வரும்.

மிதுன ராசி

இந்த நவபஞ்ச ராஜ யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியும் கிடைக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நிறைய வளர்ச்சி முன்னேற்றம் நிச்சயமாக கிடைக்கும் நீண்ட நாட்களாக உங்களுக்கு வராமல் இருந்த பணம் உங்களை வந்து சேரும். ஆன்மீகத்தில் அதிகமாக ஆர்வம் காட்டி அதில் மூழ்கி இருப்பீர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் எதிரிகளை வீழ்த்தி சமூகத்தில் மதிப்பை உயர்த்திக் கொள்வார்கள். புதிய வேலை வியாபாரம் தொடங்க வாய்ப்புள்ளது வீட்டுக்கு புதிதாக ஏதாவது ஒரு சொத்து அல்லது வாகனம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : சனிபகவானால் ஏற்படும் ஷஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் சில ராசிகள்!

Recipes AMP · Quick view
View full