சனிபகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமானவராக கருதப்படுகிறார். இவருடைய அசைவு ஒவ்வொன்றுமே மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அனைத்து கிரகங்களுடைய மாற்றத்தையும் விட சனி பகவானின் மாற்றம் மிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் அக்டோபர் 31ஆம் தேதியும் நவம்பர் ஒன்றாம் தேதியும் தீபாவளிக்கான திதி வருகிறது 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு இந்த திதி அமைவதால் சனி பகவான் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சரிக்க போகிறார். எனவே இது மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஷஷ ராஜயோகத்தை உருவாக்கப் போகிறது.
லட்சுமி நாராயண யோகம்
இந்த ஷஷ ராஜயோகத்தினாலும் லட்சுமி நாராயண யோகத்தாலும் ஏற்படக்கூடிய தாக்கம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும் ஆனாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மிக அதிகமாகவே கிடைக்கும் அவர்களுக்கு இந்த தீபாவளி முதல் பொற்காலம் ஆரம்பிக்கும் அந்த அதிர்ஷ்டமான ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
ஷஷ ராஜயோகம் மற்றும் லட்சுமி நாராயண யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் இருக்கும் வியாபாரத்தில் லாபம் அதிகரித்து வேலை செய்யக்கூடிய இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேலும் அலுவலக பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கூட கிடைக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும் வீட்டில் மன அமைதியும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருந்தால் அதிக லாபம் காண முடியும்.
சிம்ம ராசி
தீபாவளியினால் உருவாகப் போகும் இந்த இரண்டு யோகங்களால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வியாபாரம் விரிவடையும். உங்களுடைய பணி அனைவராலும் அங்கீகரிக்கப்படும் அதனால் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் மேலும் மாணவர்களாக இருப்பின் போட்டு தேர்வுகளில் நல்ல வெற்றியை பெறுவார்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் ஷஷ ராஜ யோகத்தால் கல்வியின் மற்றும் எழுத்து துறைகளில் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் அனைவருடைய ஆதரவையும் பெற முடியும். கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மன அமைதியை பெறுவார்கள். கல்வியும் மற்றும் தொழில் ரீதியாக நிறைய வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது குடும்ப வாழ்க்கை நல்லபடியாக அமையும்
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஷஷ ராஜயோகத்தால் வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு என இரண்டுமே கிடைக்கும் வணிகத்தில் இருந்தால் அது விரிவடையும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மேலும் எதிர்பாராத விதமாக நிறைய நிதிவாய்ப்பும் கிடைக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு யோகங்களினால் உத்தியோகத்தல் நல்ல முன்னேற்றம் அமையும் புதிய வருமானம் தேடி வரும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளும் வெற்றியடையும். எதிர்பாராத விதமாக உங்களுக்கு கிடைக்கும் பொருளாதார மாற்றத்தினால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : சனியால் தீபாவளியில் உச்சப் பெற போகும் ராசிகள் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு!