மணி பர்சில் பணம் நிரம்பி இருப்பதற்கு குடும்ப தலைவியின் கையால் வாங்கி வைக்க வேண்டிய ஒரு பொருள்
அனைவரும் தினமும் காலையிலிருந்து இரவு வரையில் உழைத்து கொண்டிருப்பது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். பணத்தை சேமிக்க முடியாமல் பணம் நிறைய செலவுகள் ஆகிக்கொண்டே இருப்பதை பார்க்க முடியாமலும் பண பற்றாக்குறையாலும் ஒரு சிலர் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த பணத்த
அனைவரும் தினமும் காலையிலிருந்து இரவு வரையில் உழைத்து கொண்டிருப்பது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். பணத்தை சேமிக்க முடியாமல் பணம் நிறைய செலவுகள் ஆகிக்கொண்டே இருப்பதை பார்க்க முடியாமலும் பண பற்றாக்குறையாலும் ஒரு சிலர் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த பணத்தை வைப்பதற்கு நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் என்றால் அது மணி பர்ஸ் தான். வீட்டில் இருக்கக்கூடிய பீரோவில் பணம் வைப்பதை விட பர்ஸில் தான் அதிகமாக பணத்தை வைத்திருப்போம் அதனால் அந்த பர்ஸில் நாம் ஒரு பொருளை வைப்பதன் மூலமாக நம் வீட்டில் பண வரவை அதிகரிக்க முடியும்.
பர்சில் பணம்
நாம் ஒருவரிடத்தில் சென்று பணத்தை உதவியாக கேட்கும் பொழுது என்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வேண்டுமென்றால் என்னுடைய பர்சை பார்த்துக் கொள் என்று பசி எடுத்துக்காட்டுவார்கள். நாம் இந்த மாதிரி ஒரு வருடம் நம்முடைய மணிபர்ஸை எடுத்து காட்டினால் நம்முடைய பர்சில் பணம் ஒருபோதும் தாங்காது. அதனால் நம்முடைய மணிபர்சை யாரிடமும் காட்டக்கூடாது.
பர்சில் தேவை இல்லாத பொருட்கள்
பொதுவாக நாம் எங்காவது சென்றால் அந்த இடத்தில் ஏதோ ஒன்று கொடுத்தால் அதனை நாம் பர்சில் தான் வைப்போம். உதாரணமாக பேருந்து டிக்கெட்டுகள் ஏடிஎம் ரெசிப்ட்கள் நகை அடகு வைத்த ரெசிப்ட் மாத்திரை சீட்டுகள் போன்றவற்றை வைத்திருப்போம் ஆனால் அவற்றையெல்லாம் நம்முடைய பர்சில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை ஒரு எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தி நம்முடைய பர்சில் பணம் எப்போதும் தங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் இது போன்ற தேவையற்ற பொருட்களை நாம் வைக்கக் கூடாது. அதேபோல் நமக்கு தேவையான சில முக்கிய ஆவணங்களை நாம் கையில் தான் வைத்திருக்க வேண்டும் அலைபேசியில் படம் எடுத்து வைத்திருக்க கூடாது. பெண்கள் உபயோகப்படுத்தும் ஊக்கு ஹேர்பின் முக அழகுக்கான கிரம்கள் போன்றவற்றையும் பர்சில் வைத்திருக்கக் கூடாது.
பணம் சேர பர்சில் வைக்க வேண்டிய பொருள்
பணம் நம்முடைய பர்சில் அதிகமாக சேருவதற்கு நாம் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு உரிய பொருளான ஏலக்காயை நம்முடைய மணி பர்சில் வைக்க வேண்டும். எப்பொழுதுமே மகாலட்சுமி தாயார் வாசம் நிறைந்த பொருட்களில் தான் இருப்பார் அந்த வகையில் இந்த ஏலக்காயும் ஒன்று. எனவே மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இந்த ஏலக்காயை மணி பர்சில் வைத்தால் போதும் பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏலக்காய் விளக்கு
மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இந்த ஏலக்காயை வீட்டில் வெள்ளி செவ்வாயில் விளக்கு ஏற்றும் போது உங்கள் வீட்டில் உள்ள குடும்ப தலைவியின் கையில் கொடுத்து மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பு வைத்து அதனை அவர்களுடைய கையாலையே மணி பர்சில் வைக்க சொல்லலாம். ஒவ்வொரு வீட்டினுடைய மகாலட்சுமி குடும்பத் தலைவி தான் அந்த வகையில் குடும்ப தலைவியின் கையால் இதனை செய்வதால் உங்களுடைய வாழ்க்கையில் அதிக அளவில் பணம் சேரும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பண வரப்பையே அதிகரித்து லட்சுமி யின் அனுகிரகத்தை பெற செய்ய வேண்டியவை