Advertisement
ஆன்மிகம்

உங்கள் சம்பளம் உயர வேண்டுமா ? தினமும் உங்கள் கையில் இதை மட்டும் தடவுங்கள் போதும்!

Advertisement

மாத தொடக்கத்தில் சம்பளம் வாங்கியதும் குடும்பத்தை சந்தோஷமாக நடத்துபவர்களுக்கு மாத இறுதியில் குடும்பத்தை நடத்த போதிய பணம் இருக்காது. இது மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பொருந்தும் சொந்த தொழில் செய்பவரே ஆனாலும் மாத கடைசியில் திண்டாட்டம் தான். அதிலும் வந்த வருமானத்தை சேமிக்காமல் விட்டுவிட்டால், அது இன்னும் ரொம்ப ரொம்ப கஷ்டம். மாத கடைசியில் கடன். மீண்டும் அடுத்த மாதம் தொடக்கத்தில் சம்பளம் வந்தவுடன், அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிட்டு, மாத இறுதியில் செலவுக்கு காசு இல்லாமல் திண்டாடுவோம். இந்த நிலையை மாற்றுவதற்கு என்னதான் செய்ய வேண்டும்.செலவை குறைக்க வேண்டும்.

கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது. வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சின்ன தொகையை மாதத்தின் இறுதி செலவுக்காக, கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பர்ஸில் போட்டு பரண்மேல் வைத்து விடுங்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தொடாதீர்கள். மாத இறுதி பத்து நாளைக்கு தான் செலவுக்கு அந்த பணம் என்று ஒதுக்கி வைத்து விடுங்கள். இது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். கடன் இல்லாமல் வாழ்வதற்கு இந்த குறிப்பு உபயோகமாக இருக்கும்.

Advertisement

சரி பணம் நம் கையில் தங்குவதற்கு என்ன தான் செய்ய வேண்டும்?

நம் கையை ராசியான கையை மாற்றுவதற்கு என்னதான் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் உள்ளது தினமும் நம் குல தெய்வத்தை நினைத்து ஒரு பரிகாரத்தை செய்தால் நம் கைக்கு பணம் வந்து கொண்டே இருக்கும்.

காந்தம் போல பணத்தை ஈர்க்கக்கூடிய மாசிக்காய் பரிகாரம் :

நாட்டு மருந்து கடைகளில் இந்த மாசிக்காய் பொடியாக கிடைக்கும் அல்லது எண்ணெய் கடைகளில் மாசிக்காய் எண்ணெய் என்று கிடைக்கும்.

Advertisement
உங்களுக்கு எது தேவையோ அதனை வாங்கிக் கொள்ளுங்கள். எழுந்தவுடன் குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு பின் சாப்பிட்டுவிட்டு உங்களுக்கு என்ன வேலை இருக்கிறதோ அதனை பார்க்கச் செல்வீர்கள். அப்படி வெளியே கிளம்பும் வேளையில் ஒரு நிமிடத்திற்கு முன்னர் உங்கள் குலதெய்வத்தை நினைத்து வணங்கி விட்டு இந்த மாசிக்காய் பொடியை உங்கள் உள்ளம் கையில் நன்றாக தேய்த்து விட்டு கிளம்புங்கள்.
Advertisement

மாசிக்காய் பொடி

இது வெளியில் சென்று சம்பாதித்து வருபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் குடும்ப தலைவியாக இருக்கும் பெண்களுக்கும்தான். கணவர் கொடுக்கும் பணத்தை வாங்கி பீரோவிலோ அல்லது பர்சிலோ தான் பெண்கள் வைப்பார்கள். அப்படி அவர் கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கு முன்னர் அவர்கள் தங்கள் கைகளில் இந்த மாசிக்காய் பொடியை தேய்த்துக் கொண்டு வாங்கினால் அவர்கள் கையிலும் பணம் புரளும்.

அப்போது நீங்கள் கையில் வாங்கிய பணம் வீண் செலவு ஆகாமல் வீட்டில் சேமிப்பில் இருக்கும். பணத்தை நிறைய சேர்க்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால் கூட இதை கையில் பூசிக்கொள்ளலாம் தவறு கிடையாது. பணத்தை காந்தம் போல ஈர்க்க இந்த வாசம் உங்களுக்கு ஒரு வழியை காட்டும். இப்பரிகாரத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இதனை நீங்களும் செய்து வீண் செலவு செய்யாமல் பண சேமிப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

10 நிமிடங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

4 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

4 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

5 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

7 மணி நேரங்கள் ago