பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்க செய்ய வேண்டியவை!

பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் கடினமான வேலையாக இருக்கிறது என்றாலும், அந்த பணத்தை சேமிப்பது அதனை விட கடினமான ஒன்று. என்னதான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் கைக்கு வந்த உடனே பணம் இருந்து விடுமே தெரியாமல் காணாமல் போய்விடும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க ஒரு சில விஷயங்க

By ·

பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் கடினமான வேலையாக இருக்கிறது என்றாலும், அந்த பணத்தை சேமிப்பது அதனை விட கடினமான ஒன்று. என்னதான் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் கைக்கு வந்த உடனே பணம் இருந்து விடுமே தெரியாமல் காணாமல் போய்விடும். பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க ஒரு சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும் அப்படி பின்பற்றினால் நம் கையில் பணம் தங்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பணம் வீண் விரயமாகாமல் இருக்க செய்ய வேண்டியவை

பணம் நம் கையில் இருந்து வீண் செலவு ஆகாமல் இருக்க முதலில் வெள்ளிக்கிழமை பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது அவசர சூழ்நிலையாக இருந்தாலும் கூட கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுத்தாலும் அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் ஆவது திருப்பி வாங்க வேண்டும்.

வெள்ளிக்கிழமையில் வெள்ளை நிற பொருட்களான அரிசி பால் தயிர் சர்க்கரை போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கவே கூடாது இதனால் குடும்பத்தில் பணம் தங்காமல் வறுமை அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை என்று தெய்வ ப் திருவுருவப்படங்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கவே கூடாது.

பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க செய்ய வேண்டியவை

வெள்ளிக்கிழமை என்று மகாலட்சுமி தேவியாருக்கு மல்லிகை பூக்களால் அலங்கரித்து வழிபாடு செய்ய வேண்டும் இதனால் வீட்டில் மகாலட்சுமியின் வரவு அதிகரித்து பணம் அதிகமாக சேரும்.

வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தாலும் பணம் வீண் விரயம் ஆகாமல் பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

வெள்ளிக்கிழமையில் வீட்டில் செய்ய வேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் கடைபிடித்தாலே பணம் வீண் விரயமாகாமல் பணம் அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய வழிபாடு!

Recipes AMP · Quick view
View full