பணம் என்ற வார்த்தையில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் என்பது இன்றியமையாத ஒன்று. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். பணம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை எப்படி நம் வசம் ஆக்கிக் கொள்வது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பணம்

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கடுமையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும்.மேலும் அந்த பணம் நம் கையில் தங்க வேண்டும் என்றால் நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.மேலும் ஆன்மீக ரீதியாக கடவுளை முழுவதுமாக நம்பி சரணடைய வேண்டும்.
பணத்தை நம் வசம் வைத்துக் கொள்ள செய்ய வேண்டியது
பணத்தை நம் வசம் வைத்துக் கொள்ளவும் பணத்தை கையாளுவதற்கும் பணம் நம்மிடம் பல மடங்கு பெருகுவதற்கும் எப்பொழுதுமே கொஞ்சம் பணத்தை எடுத்து தனியாக வைக்க வேண்டும்.அந்த பணத்தை செலவு செய்ய கூடாது. அதற்கு 200 ரூபாய் பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைக்க வேண்டும். அதனை தினமும் எடுத்து எண்ணி பார்க்க வேண்டும் அப்படி எண்ணும்போது கவுண்ட் என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். பிறகு பணத்தை பீரோவில் வைக்க வேண்டும் மறுபடியும் அடுத்த நாள் இதே போல் செய்ய வேண்டும்.
பணம் தேடி வரும்
200 ரூபாய் நோட்டுகளை பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றும் போது கைநிறைய பணம் இருப்பது போல் இருக்கும். கைகளில் நிறைய பணம் இருக்கிறது என்று எண்ணம் நம் மனதிற்குள் வந்து விட்டாலே நம் கையில் அதிகமாக பணம் சேரும். மேலும் கவுண்ட் என்று சொல்லும் வார்த்தைக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி உள்ளது. மேலும் அந்த பணத்தை யாருக்கும் கடனாகவோ செலவு செய்யவோ கூடாது. அப்படியே நீங்கள் வேறு பணத்தை யாருக்காவது கடனாக கொடுக்கும் போதும் பணத்தை மடித்து மூடிய பகுதியை பணம் கொடுப்பவர்களின் பக்கம் இருக்குமாறு பார்த்து அந்த பணத்தை கொடுக்க வேண்டும். என்னதான் பணத்தை உழைத்து சம்பாதித்தாலும் அந்த பணம் பன்மடங்காக பெருகுவதற்கு சிறிய பரிகாரங்களை செய்தால் மிகவும் நல்லது.
இதனையும் படியுங்கள் : பணம் வீட்டிற்கு தேடி வர தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டிய பொருள்!